மாரிமுத்து மரணத்தை அன்றே கணித்த ஜீவானந்தம்.? அதனால் தான் இந்த காட்சியா.?

marimuthu
marimuthu

Ethirneechal Marimuthu: எதிர்நீச்சல் சீரியலில் பேசியது போலவே நடிகர் மாரிமுத்து நிஜத்திலும் உடல்நிலை பாதிப்பினால் உயிரிழந்திருக்கும் நிலையில் இது குறித்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ஷேர் செய்து கண்கலங்கி வருகின்றனர். மாரிமுத்து தனது 57 வயதில் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இது திரையுலகினர்கள், ரசிகர்கள் என அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது இது பொய்யாக இருக்காதா என பலரும் எதிர்பார்த்து வந்தனர். அந்த அளவிற்கு மாரிமுத்து குணசேகரனாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் மாரிமுத்து கவர்ந்துள்ளார். தமிழ் திரைவுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் பணியாற்றி வந்த மாரிமுத்து ஒரு கட்டத்தில் சின்னத்திரை உலகிலும் அறிமுகமானார்.

அப்படி இவர் நடிகராகவும், இயக்குனராகவும் பணியாற்றிய போது  கிடைக்காத வெற்றியும், புகழும் எதிர்நீச்சல் சீரியலின் மூலம் கிடைத்தது. எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். ஆரம்பத்தில் வில்லனாக நடித்து வந்த இவரை ரசிகர்கள் தித்தி தீர்த்து வந்தனர் ஆனால் ஒரு கட்டத்தில் ஹீரோவாக ஏற்றுக் கொண்டது மிகவும் வியப்பாக அமைந்தது.

எதிர்நீச்சல் சீரியலின் மூலம் குணசேகரன் கேரக்டரில் நடித்த மாரிமுத்து குழந்தை முதல் இளம் வயதினர், முதியவர்கள் என அனைவரையும் கவர்ந்துள்ளார் என்பது அவருடைய மறைவிற்குப் பிறகு தெரியவந்துள்ளது. மாரிமுத்து நேற்று காலையில் எதிர்நீச்சல் சீரியலுக்கான டப்பிங் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது நெஞ்சுவலி ஏற்படுவதாக சாக நடிகரான கமலேஷிடம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு இவருடைய மறைவு திரை உலகினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இவ்வாறு ரசிகர்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் நேரில் சென்று மாரிமுத்துவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். இந்த சூழலில் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கீழநெஞ்சு வலிப்பது போல இருப்பதாக கூறி நடித்திருப்பார் இவ்வாறு சீரியலில் கூறியது போலவே நிஜத்தில் நடந்து விட்டதாக ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.