ஏகே 62 படத்தின் படபிடிப்பு தள்ளிப் போனதால் உச்சகட்ட சோகத்தில் இருக்கும் ரசிகர்கள்.! இதுதான் காரணமா.?

ak62
ak62

கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படமான துணிவு திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித் அவர்கள் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற உடனே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கி இருந்தது. இப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வருகிறது.

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது ஏகே 62 படத்தின் படபிடிப்பு தள்ளிப்போனதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

அதாவது ஏகே 62 திரைப்படத்தில் கதையில் கொஞ்சம் மாற்றம் வேண்டும் என்று அஜித் அவர்கள் கூறி இருக்கிறாராம் அதனால் தான் இந்த படத்தின் கதையை விக்னேஷ் சிவன் கொஞ்சம் மாற்றி வருகிறதாக தகவல் வெளியாகி இருக்கிறது இதனால் தான் ஏகே 62 திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி போனதாக தகவல் வெளியாகியிருக்கிறது ஆனால் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் அஜித் உடன் இணைந்து சந்தானம் மற்றும் அரவிந்த் சாமி நடிக்க இருக்கிறார்கள். மேலும் கதாநாயகிக்கான தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கும் என்று ஏற்கனவே இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறியிருந்தார் ஆனால் படப்பிடிப்பு தள்ளிப் போனதால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் அஜித்திற்கு ஏற்றவாறு கதையை அமைத்துவிட்டு படப்பிடிப்பை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது அது மட்டுமல்லாமல் ஏகே 62 திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.