நடிகர் அஜித் தற்பொழுது எச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்பு வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் அஜித் நடித்திருந்தார் அந்தத் திரைப்படத்தையும் போனி கபூர் அவர்கள் தான் தயாரித்திருந்தார் தற்பொழுது அஜித் நடித்த ஒரு புதிய திரைப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.
படப்பிடிப்பு ஒரு ஓரமாக இருந்தாலும் சமீப காலமாக அஜித் ரசிகர்களின் கண்களில் தென்பட்டு கொண்டே இருக்கிறார். அதற்கு காரணம் அஜித் பைக் ட்ரிப் சென்று இருக்கிறார். அதாவது இமயமலையில் பல முக்கிய இடங்களுக்கு அஜித் பைக் ட்ரிப் சென்றுள்ளார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வந்தது அனைவரும் பார்த்து இருப்போம்.
அதுமட்டுமில்லாமல் அஜித் சமீபத்தில் கோவிலுக்கு சென்ற புகைப்படமும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இதனால் தற்பொழுது அஜித் சில ரசிகர்களிடம் பேசியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக வருகிறது. அஜித் பிஎம்டபிள்யூ பைக்கில் கெத்தாக சாய்ந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது ரசிகர் ஒருவர் அவரைப் பார்த்து பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்பொழுது அந்த ரசிகர் உங்களை மூன்று நாட்களாக தேடிக் கொண்டிருந்தோம் பார்க்கவே முடியவில்லை எனக் கூறினார் அதற்கு அஜித் தேடிகிட்டு இருந்தீங்களா நான் என்ன கொலைகாரனா இல்ல கொள்ளைக்காரனா என அஜித் செம ஜாலியாக அந்த ரசிகர்களிடம் பேசியுள்ளார். அதற்கு அந்த ரசிகர் இல்ல சார் உங்கள பார்க்கத்தான் அஜித் ஹெல்மெட்டை கழட்டி விட்டு ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார்.
இந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் படு வேகமாக வைரல் ஆகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள். எச் வினோத் இயக்கு\ம் புதிய திரைப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என கூறப்பட்டது இது எந்த அளவு முழுமையான தகவல் என்று தெரியவில்லை விரைவில் அதன் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Ajith sir ❤️😍#AjithKumar #AK #AK61 pic.twitter.com/LM6XkYO7qZ
— Ajith Network (@AjithNetwork) September 16, 2022