Ethirneechal marimuthu : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்துள்ளது. இந்த சீரியலில் முதுகெலும்பாக நடித்து வந்தவர் நடிகர் மாரிமுத்து இவர் மறைவிற்குப் பிறகு மக்கள் எதிர்நீச்சல் சீரியலில் யார் அடுத்த குணசேகரன் ஆக நடிக்கப் போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.
இதனைத் தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த குணசேகரனாக வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார் ஆனால் இவரின் நடிப்பை பார்த்த பலரும் குணசேகரன் நடித்த லெவலுக்கு காமெடியாகவும் நையாண்டியாகவும் இவரால் நடிக்க முடியாது என புரிந்து கொண்டார்கள்.
மாரிமுத்து சீரியலில் நடிப்பதற்கு முன்பு ஒரு சில திரைப்படங்களில் குணசத்திர வேடத்தில் நடித்து வந்தார் அது மட்டும் இல்லாமல் கடைசியாக ஜெயிலர் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராக ஒரு சில திரைப்படங்களை இயக்கினார். ஆனால் அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை மேலும் இவர் இந்தியன் 2 சூர்யாவின் கங்குவா திரைப்படங்களில் நடித்து வந்தார்..
மாரிமுத்துவுக்கு மிகப்பெரிய எதிர்காலத்தை உருவாக்கி தந்தது எதிர்நீச்சல் சீரியல் ஆனால் இந்த சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியாமல் திடீரென மாரடைப்பை ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
இவரின் இழப்பு எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய இழப்பாக கருதப்பட்டது இந்த நிலையில் விழுப்புரத்தில் நடிகர் மாரிமுத்து – வுக்கு பாஜகவினர் சிலை வைத்துள்ளனர் அதுமட்டுமில்லாமல் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபெண் மோடிக்கும் சிலை வைத்துள்ளார்கள்.