தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. இவர் முதன்முதலில் 2008ஆம் ஆண்டு தசாவதாரம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன்பிறகு 2009ஆம் ஆண்டு காஞ்சிபுரம் என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து பிரபலமடைந்தவர். இந்த திரைப்படத்தில் நடித்ததால் சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார்.
இதனைத் தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்தார் ஆனால் இவர் நடித்த திரைப்படங்கள் குறிப்பிடும்படி அமையவில்லை. இந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரிக்கு காதலியாக நடித்து இருந்தார்.
இந்த திரைப்படம் தான் இவருக்கு அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உறுதுணையாக இருந்தது. இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு பல திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து இருந்தார் அதுமட்டுமில்லாமல் கடைசியாக இவர் இரண்டாம் குத்து திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் 2019ஆம் ஆண்டு தன்னுடைய நண்பர்களுடன் ஆடிய நடன வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார் அதை பார்த்த ரசிகர்கள் விமர்சித்தார்கள். நேற்று தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு பல நடிகைகள் மற்றும் நடிகர்கள் தங்களுடைய புகைப்படத்தை வெளியிட்டு பொங்கல் வாழ்த்து கூறி வந்தார்கள்.
அதேபோல் நடிகை ஷாலு ஷம்மு அவர்களும் தங்களுடைய புகைப்படத்தை வெளியிட்டு பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார் அதை பார்த்த ரசிகர் ஒருவர் பொங்கல் வைக்கும்போது தள்ளி நில்லுங்க நல்ல கட்டையா இருக்குதுன்னு அடுப்பில் வைத்துவிட போறாங்க என கிண்டல் செய்துள்ளார்.