தமிழ் திரையுலகில் நிறைய திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தைப் பிடித்துக் கொண்டவர் யோகி பாபு இவர் நிறைய திரைப்படங்களில் காமெடி நடிகனாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார்.
இவ்வாறு நடித்து வந்த யோகிபாபு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் அந்த வகையில் இவர் நடித்த கூர்க்கா, கோலமாவு கோகிலா,தர்மபிரபு போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
மேலும் யோகி பாபு மஞ்சு பார்கவி என்பவரை எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார் பின்னர் அவரது திருமணம் குறித்து சினிமா துறையில் பேசப்பட்டு வந்தது என்பது பலருக்கும் தெரியும்.
மேலும் தற்பொழுது யோகி பாபு விற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என ஒரு காமெடி நடிகர் தெரிவித்திருக்கிறார் அந்த காமெடி நடிகர் வேறுயருமில்லை யோகி பாபுவின் நண்பரான மனோபாலா தான் யோகி பாபுக்கு ஆண் குழந்தை மிகவும் மகிழ்ச்சி தாயும் சேயும் நலம் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
இவர் வெளியிட்ட இந்த பதிவு யோகி பாபு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
நண்பன் யோகி பாபுவுக்கு ஆண் குழந்தை… மிகவும் மகிழ்ச்சி… தாயும் சேயும் நலம்…
— Manobala (@manobalam) December 28, 2020