ரசிகர்களே.. நடிகர் விஜயின் மாமனார் மற்றும் மாமியாரை பார்த்து உள்ளீர்களா.! இதோ புகைப்படம்.

vijay-

தமிழ் சினிமா உலகில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் அண்மை காலமாக நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்கள்தான் அந்த வகையில் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படமான வாரிசு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இந்த படம் விஜய்க்கு 66-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. வாரிசு படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார் பிரம்மாண்ட பொருள் செலவில் தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்தில் இரண்டு கட்ட ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த கட்ட ஷூட்டிங்கில் தற்பொழுது பட குழு முன்பறமாக வேலை செய்து வருகிறது.

இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, குஷ்பூ, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஒரு கலவையான படமாக உருவாகி வருவதாக..

படத்தின் தயாரிப்பாளர் தொடங்கி இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் வரை பலரும் சொல்லி வருகின்றனர். இது போதாத குறைக்கு இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் மற்றும் வீடியோக்கள் லீக் ஆகி அதை உறுதிப்படுத்துகின்றன. சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் இருவருக்கும் தற்பொழுது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். நாம் பெரிதும் விஜயின் அப்பா அம்மாவை பார்த்திருப்போம் ஆனால் நடிகர் விஜயின் மாமனார் மற்றும் மாமியாரை பார்த்திருக்க மாட்டோம். இதோ தளபதி விஜயின் மாமனார் மற்றும் மாமியார் இருக்கும் அந்த அழகிய புகைப்படம்.

vijay and sangeetha
vijay and sangeetha