Famous Newsreader Divya Duraisamy said about her fitness: செய்திவாசிப்பாளர் திவ்யா துரைசாமி கடந்த சில நாட்களாகவே மிகவும் பிரபலம் அடைந்து வருகிறார், சினிமாவில் இருக்கும் நடிகைகள் எவ்வாறு பிரபலமடைந்து வருகிறார்களோ. அதைவிட இரண்டு மடங்கு சின்னத்திரையில் இருக்கும் செய்திவாசிப்பாளர் தொகுப்பாளினி சீரியல் நடிகைகள் என அனைவரும் பிரபலம் அடைந்து வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் காரணமாக 144 தடை விதிக்கப்பட்டு மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளார்கள். அதேபோல் பிரபலங்களும் வீட்டிலேயே இருக்கிறார்கள், அந்த வகையில் வீட்டில் இருக்கும் பொழுது போரடிக்காமல் இருப்பதற்கு தங்களுடைய பழைய புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் செய்திவாசிப்பாளர் திவ்யா துரைசாமி சில புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், சொக்கி விழுந்து உள்ளார்கள் உடனே அவருடைய கமெண்ட் பாக்ஸில் உங்கள் உடல் கட்டுக்கோப்புடன் இருப்பதற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பியுள்ளார்கள் அதற்கு திவ்யா துரைசாமி பதிலளித்துள்ளார்.
அவர் கூறியதாவது தினமும் காலை இரண்டு மணிநேரம் ஜிம்மில் வொர்க் அவுட் செய்ய வேண்டும். அதன்பிறகு சாக்லேட், ஐஸ்க்ரீம், கேக், ஸ்வீட்ஸ், நொறுக்குத்தீனி, பேக்கரி தின்பண்டங்கள், ஆயில் ஐட்டங்கள், கூல்ட்ரிங்ஸ் என எதையும் சாப்பிடும் பழக்கம் எனக்கு கிடையாது. அதனால் வீட்டில் ஸ்னாக்ஸ் வாங்கி வைக்க மாட்டோம். வீட்டிற்கு என்று யாராவது வந்தால் அவர்களுக்கு கொடுப்பதற்காக மட்டுமே ஸ்நாக்ஸ் வாங்கி வைப்போம்.
மேலும் எனக்கு அதிகபட்சமான ஆசை பிரியாணி சாப்பிடுவதுதான். அதனால் மூன்று மாதத்திற்கு ஒருமுறை பிரியாணி சாப்பிட்டு விடுவேன். அப்படி பிரியாணி சாப்பிட்டால் அந்த வாரம் ஃபுல்லா பழங்களை எடுத்துக்கொள்வேன், இல்லையென்றால் என்னுடைய மாஸ்டர் எக்ஸ்ட்ரா ஜிம் ஒர்க்கவுட் கொடுத்துவிடுவார்.
அதேபோல் தம் அடிக்கும் பழக்கமும் தண்ணியடிக்க பழக்கமும் எனக்கு அறவே கிடையாது. அதுமட்டுமில்லாமல் சக்கரையை பயன்படுத்தவே மாட்டேன். நான் எப்பொழுதும் சாப்பிடும் ஸ்னாக்ஸ் கடலை மிட்டாய், பிஸ்கேட் அதன்பிறகு கோதுமை மாவில் நானே செய்யும் ஸ்னாக்ஸ் இது மட்டும்தான் சாப்பிடுவேன்.
அதேபோல் என் பக்கத்தில் உட்கார்ந்து யார் எந்த வகையான உணவுகளை வெட்டு வெட்டு வெட்டு நாளும் அதை கொஞ்சம் கூட டேஸ்ட் கூட பண்ண மாட்டேன், என் பக்கத்துல யார் என்ன சாப்பிட்டாலும் கண்டு கொள்ளவே மாட்டேன் எவ்வளவு பசியாக இருந்தாலும் சரி, ஓசி ட்ரீட்டு இன்னும் எவ்வளவு கிடைச்சாலும் எதையும் கண்டிப்பாக சாப்பிட மாட்டேன். அதில் எது ஹெல்தியோ அதை மட்டும் எடுத்துக் கொள்வேன்.
இது எல்லாத்தையும் விட மிக முக்கியமானது மைன்ட் கண்ட்ரோல் தான். அது இருந்தால் மேலே உள்ளவை எல்லாம் ஜஸ்ட் லைக் தட் தான் என்று கூறினார்.