தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக 90 காலகட்டங்களில் இருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவரது உண்மையான பெயர் விஜயலட்சுமி ஆகும் இவர் முதன் முதலில் சினிமாவில் நடிக்க தான் ஆசை கொண்டு வந்தார் ஆனால் அப்போது அவரிடம் பெருமளவு பொருளாதாரம் இல்லாத காரணத்தினால் சில்க் ஸ்மிதா சென்னை வந்து நடிகைகளுக்கு மேக்கப் போடும் பணியை தான் முதலில் செய்து வந்தாராம்.
தொடர்ந்து இந்த தொழிலையே பார்த்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் வினு சக்கரவர்த்தி “வண்டிக்காரன்” திரைப்படத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்தார் அதில் இவரது அழகு மற்றும் திறமையை கண்ட தமிழ் சினிமா தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தது.
சில்க் ஸ்மிதா நடிப்பின் மூலம் தனது பெயர் பேச வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கி இருந்தது ஆனால் தமிழ் சினிமா அவருக்கு கவர்ச்சியை பெரிதும் கொடுத்து அழகு பார்ப்பது வேறு வழி இல்லாமல் அதில் தனது திறமையை காட்டி மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வந்தார் சில்க் ஸ்மிதா.
தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் உச்ச நடிகையாக சில்க்ஸ்மிதா மாறினார். சிலக் சுமிதா அவ்வபோது பேட்டிகளில் பேசுவதை வழக்கமாக் வைத்து இருந்தார். அப்படி ஒன்றில் கூறியது : நான் உண்மையில் ஒரு நக்சலைட் ஆக வேண்டும் என்பதே எனது ஆசை என அவர் கூறியிருந்தார்.
சினிமாவில் ஐட்டம் பாடல், கிளாமர் கதாபாத்திரம் எது கொடுத்தாலும் நடித்து வந்த சில்க்ஸ்மிதா உனக்கு இப்படி ஒரு ஆசை இருந்தாம். இப்பொழுதுதான் வெளி உலகத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வந்துள்ளது இச் செய்தி தற்பொழுது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.