நடிகர் சிவகார்த்திகேயன் டான் பட இயக்குனருக்காக செய்துள்ள செயல் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை அடைந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் நடிப்பில் வெளியாகி பல திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அதுமட்டுமில்லாமல் சிவா நடிப்பில் வெளியாகும் திரைப்படத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்ப்பார்கள் அதேபோல் ஃபேமிலி ஆடியன்ஸ் இவருக்கு அதிகம் என பல பிரபலங்கள் கூறியுள்ளார்கள். ஏன் சமீபத்தில்கூட எஸ் ஜே சூர்யா அவர்களும் சிவகார்த்திகேயனுக்கு விஜய் போல் ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகமாக இருக்கிறார் எனக் கூறினார்.
சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். அதேபோல் இந்த திரைப்படத்தில் லைக்கா நிறுவனமும் எஸ்கே புரடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், சிவாங்கி, எஸ் ஜே சூர்யா சமுத்திரகனி, ராதாரவி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் படத்தில் சிவகார்த்திகேயன் ஏதாவது சாதிக்க வேண்டும் தனக்கு இருக்கும் திறமையை வெளிக் கொண்டுவர வேண்டுமென நினைக்கிறார் அப்போது கல்லூரியில் பணியாற்றி வரும் எஸ் ஜே சூர்யாவிற்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.
மோதலுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் டிகிரி வாங்கினாரா என்பதுதான் படத்தின் கதை. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் செய்திருக்கும் செயல் தான் சமூக வலைத்தளத்தில் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் தன்னை பார்க்க வந்த ரசிகர் கூட்டத்தை படத்தின் இயக்குனரை ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு முன்பு சிவகார்த்திகேயன் அறிமுகம் செய்துள்ளது பார்ப்பவர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது டான் திரைப்படத்தை பார்க்க சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் அனைவரும் தங்களுடைய ரசிகர்களுடன் ஒன்றாக சேர்ந்து படம் பார்த்து இருந்தார்கள் அப்பொழுது படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயன் பெயரை சொல்லி திரையரங்கில் கத்தினார்கள் அப்பொழுது இயக்குனர் இவர்தான் எனக்கூறி ரசிகர்களிடையே கூறியுள்ளார் சிவகார்த்திகேயன் இதை புரிந்துகொண்ட ரசிகர்கள் இயக்குனரை பாராட்டி கத்தினார்கள்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.