தமிழ் சினிமாவில் நச்சென்று நான்கு படம் எடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி சினிமாவில் தனக்கென ஒரு அந்தஸ்தை பிடித்தவர் தான் யோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளிவரும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் அனைத்து திரைப்படங்களும் சமூகத்திற்கு நல்ல கருத்தினை கூறும் வகையிலும் அமைந்து வருகிறது.
அந்த வகையில் இவருடைய இயக்கத்தில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட நான்கு திரைப்படங்கள் வெளியாகி மெகா ஹிட் அடித்துள்ளது. இவ்வாறு இவருடைய அடுத்த படத்தில் விஜயுடன் இணைந்துள்ளார். கோலிவுட்டில் வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் விஜயை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய நிலையில் தற்போது லியோ என்ற படத்தினை இயக்கி வருகிறார்.
இந்த படம் முழுக்க முழுக்க இவருடைய ஸ்டைலில் உருவாகி வருவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர். லியோ படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது காஷ்மீரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் வெற்றி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இவருடைய நெருங்கிய நண்பரும், இயக்குனருமான ரத்னகுமாரின் இயக்கத்தில் ஒரு படத்தினை லோகேஷ் கனகராஜ் தயாரிக்க முடிவு செய்துள்ளாராம். இதனை அடுத்து நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாக இருக்கும் படத்தையும் லோகேஷ் கனகராஜ் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் துவங்க இருப்பது குறித்த தகவல் வைரலாகி வரும் நிலையில் அதனை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அதாவது வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் யோகேஷ் கனகராஜ்க்கு ஏன் இந்த வேண்டாத வேலைகள். தயாரிப்பு நிறுவனம் என்பது சாதாரண விஷயம் இல்லை, தயாரிப்பில் ஏதாவது தவறாக ஒன்று நடந்தால் லோகேஷை மிகவும் பாதிக்கும் என தங்களுடைய கருத்துக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.