மற்றவர் நல்லா இருக்கக் கூடாதுன்னு நினைத்தால் உனக்கு அந்த நொடியே குழி தோண்டப்படும்..! செல்வராகவன் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

selvaragavan-2

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் செல்வராகவன் இவர் திரைப்படம் இயக்குவதில் ஆர்வம் காட்டுவது மட்டுமல்லாமல் பல்வேறு திரைப்படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார் அந்த வகையில் சமீபத்தில் இவர் சாணி காகிதம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் பிரபல நடிகர் தனுஷின் அண்ணன் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் இயக்குனராக பணியாற்றிய பொழுது மாபெரும் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் செவன் ஜி ரெயின்போ காலனி திரை படத்தை இயக்கும் பொழுது இயக்குனர் செல்வராகவனுக்கு கதாநாயகியாக இத்திரைப்படத்தில் நடித்த சோனியா அகர்வாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது காரணமாக பின்னர் இந்த காதல் திருமணத்தில் முடிவடைந்துவிட்டது.

இவ்வாறு திருமணம் நடந்து முடிந்ததன் பிறகுதான் தெரிந்தது சோனியா அகர்வாலின் வாழ்க்கை வரலாறு ஏனெனில் இவர் தவறான சவகாசம் மற்றும் அதிக குடிப்பழக்கம் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டதன் காரணமாக இயக்குனர் செல்வராகவன் அவர்கள் இவரை விவாகரத்து செய்து விட்டார்.

தற்போது விவாகரத்தில் முடிந்த கையோடு மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டியாக வாழ்ந்து வரும் செல்வராகவன் தற்சமயம் தன்னுடைய தம்பியை வைத்து நானே வருவேன் என்ற ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் செல்வராகவன் அவர்கள் இன்னொருவர் நல்லா  இருக்க கூடாது என்று நினைத்தீர்கள் என்றால் அந்த நொடியே உங்களுக்கு குழி தோண்டப்படும் என்பதை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டுமென தன்னுடை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

selvaragavan-1
selvaragavan-1

இதைபார்த்த ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயனுக்கும் தனுஷுக்கும் இடையே நடந்த மோதலை வைத்து தான் இப்படி செல்வராகவன் கூறுகிறார் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.