நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித்தின் வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளிவந்து வெற்றியைக் கண்டு வருகிறது வலிமை படம் முழுக்க முழுக்க ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து இருப்பதால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களை வெகுவாக திரையரங்கம் உள்ளது.
வலிமை திரைப்படம் வெளியான நாளில் இருந்து இப்பொழுது வரையிலும் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூலில் மட்டுமே எந்த குறையும் வைக்காமல் அடித்து நொறுக்கி வருகிறது சொல்லப்போனால் தமிழகத்தில் மட்டுமே முதல் நாளில் 36.17 கோடி வசூலித்து வந்த நிலையில் அடுத்தடுத்த நாட்களிலும் வசூலில் குறையாமல் கணிசமாக வந்து கொண்டிருக்கிறது.
இதேபோல் மற்ற இடங்களான ஹிந்தி, கர்நாடகா, ஆந்திரா போன்ற இடங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது சொல்லப்போனால் உலக அளவில் இதுவரையிலும் சுமார் 130 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் வெளிவந்து இதோட நான்கைந்து நாட்களில் ஆகிய நிலையிலேயே வலிமை படம் 130 கோடிக்கும் மேல் வசூல் செய்தது மிகப்பெரிய ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் வலிமை படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் பலரும் ஒரு படத்துடன் ஒப்பிடுகின்றனர். 2013 ஆம் ஆண்டு ஆனந்த் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படத்தின் சாயல் இந்த படத்தில் இருப்பதாக சிலர் சமூக வலைதள பக்கங்களில் பதிவுகளை போட்டு வருகின்றனர்.
மேலும் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணாவுக்கு போன் செய்து இதை சொல்லி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணா ஒரு பதிவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் போட்டுள்ளார் அதில் அவர் கூறியது : வலிமை படம் சிறப்பாக ஓடி கொண்டிருக்கிறது இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா புத்துயிர் பெற்று உள்ளதாக கூறினார். ஒரு ரசிகனாக அஜித்தின் அடுத்த படத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றன என கூறிய இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டி உள்ளார்.