தமிழ் திரைவுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வரும் எஸ். ஏ சந்திரசேகர் அவர்கள் தற்பொழுது இமய மலைக்கு சென்றுள்ள நிலையில் அங்கு ராயல் என்ஃபீல்டு பைக் முன்பு அமர்ந்தது போன்ற போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய்யின் தந்தையான இவர் சமீப காலங்களாக தன் மகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணங்களாக பேசாமல் இருந்து வருகிறார்.
மேலும் இவர்கள் விரைவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படிப்பட்ட நிலையில் எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் சில மாதங்களுக்கும் முன்பு யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார் அதில் தொடர்ந்து தன்னுடைய சினிமா பயணம் குறித்தும் தனது வாழ்வில் நிகழ்ந்த சுவாரசியமான நிகழ்வுகளையும் பேசி வந்தார்.
இவ்வாறு யூட்யூப் சேனல் தொடங்கிய பிறகு தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் ஏராளமான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் மேலும் தற்பொழுது இமயமலைக்கு சென்று உள்ளவர் அங்கு உள்ள ராயல் என்ஃபீல்டு பைக் முன்பு அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக அனைவரும் ஷாக்காகி உள்ளார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் நடிகர் அஜித் இமயமலையில் பைக் ட்ரிப் சென்றிருந்தார் அவரின் பைக் புகைப்படங்கள் வெளியாகி வைரலான நிலையில் அஜித்திற்கு டப் கொடுக்கும் அளவிற்கு எஸ்.ஏ சந்திரசேகர் அவர்களும் அங்கிருந்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பல கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இயக்குனர் சந்திரசேகர் அவர்கள் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களை இயக்கி வந்த நிலையில் சமீப காலங்களாக எந்த படத்தையும் இயக்காமல் இருந்து வருகிறார் மேலும் இவர் தொடர்ந்து ஏராளமான முக்கிய நபர்களை விமர்சித்த வந்த நிலையில் பல சர்ச்சைகளிலும் சிக்கிக்கொண்டார் இதன் காரணமாக தன்னுடைய தந்தை பேசியது பிடிக்காமல் தான் விஜய் பேசாமல் இருந்து வருகிறார் எனவும் கூறப்படுகிறது.