சூர்யாவின் புதிய கெட்டப்பை பார்த்து கொண்டாடும் ரசிகர்கள்.! ஆனா இது எந்த படத்துக்குன்னு தெரியலையே..

surya

சினிமா உலகில் வெற்றி நாயகனாக வலம் வரும் சூர்யா சமீபகாலமாக வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் சூரரைப்போற்று திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்றதால் தொடர்ந்து தற்போது சிறந்த இயக்குனர்களிடம் கதை கேட்டு வித்தியாசமான அதே சமயம் நல்ல படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

தற்போது இவரது நடிப்பில் வெகுவிரைவிலேயே ஜெய்பீம் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதற்கு அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் இவருடன் இணைந்து ராதிகா மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். அதன்பின் வெற்றிமாறனுடன் வாடிவாசல் அடுத்ததாக சிறுத்தை சிவாவுடன் ஒரு படம் பன்ன இருக்கிறார் என்ற தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.

இந்த காரணத்தினால் அடுத்த வெற்றி திரைப்படங்களாக கொடுத்து  மிகப்பெரிய ஒரு உச்சத்தை எட்ட தடையாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். இப்படி நடித்து கொண்டு இருந்தாலும் மறுபக்கம் சிறப்பான திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்.  அந்த வகையில் ரம்யா பாண்டியன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற சூப்பர் படத்தை தயாரித்து இருந்தார்.

அது தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களை ஒருபக்கம் தயாரித்து வருகிறார் இவரும் இவரது மனைவியும் தற்பொழுது படங்களை தயாரிப்பது என் நடிப்பதுமாக இருப்பதால் சினிமா உலகில் இவரது பெயர்கள் அடிபட்டு கொண்டே இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சிவகுமாரின் பிறந்த நாள் என்பதால் குடும்பத்தினர் அனைவரும் வாழ்த்து சொல்லி அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் தீயை பரவி வருகிறது மேலும் இதில் சூர்யா வேறு மாதிரியான ஒரு லுக்கில் இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி கொண்டாடி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

surya
surya