Leo Movie: ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிரியாமணி ஜவான் படத்தினை தொடர்ந்து லியோ திரைப்படம் வெளியாக இருக்கிறது என்று சொன்னதும் ரசிகர்கள் ஆரவாரம் செய்து அரங்கையே அலற வைத்துள்ளனர்.
பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக ஜவான் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
எனவே ஜவான் படத்தின் ரிலீஸ் இருக்கும் முன்பு இந்த படத்தின் பட குழுவினர்கள் ப்ரோமோஷன் பணிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அப்படி முதல்கட்டமாக நேற்று ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஷாருக்கான், அட்லீ அனிருத், விஜய் சேதுபதி என பலரும் கலந்து கொண்டனர்.
ஜவான் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் பிரியாமணி மேடையில் பேசுகையில் இசையமைப்பாளர் அனிருத்தை புகழ்ந்து கொண்டிருந்தார். இசையமைப்பாளர் அனிருத் தற்பொழுது பல பெரிய திரைப்படங்களை இசையமைத்து வருகிறார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் மூவி மேலும் இவருடைய இசையில் ஜவான் திரைப்படத்தினை தொடர்ந்து லியோ திரைப்படம் வெளியாகிறது என்று சொன்னதும் ரசிகர்கள் அரங்கையே அலறவைத்து ஆரவாரம் செய்தனர்.
உடனே நடிகை பிரியாமணி சரி என்ன கொஞ்சம் பேச விடுங்க.. என்று கூறியும் ரசிகர்களின் கூச்சல் நிற்காமல் அரங்கையே அதிர வைத்தது. இவ்வாறு ஜவான் படத்தின் பாடல்கள் ஹிந்தியிலும், தமிழிலும் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்த நிலையில் அதேபோல் அனிருத் இசையமைத்திருக்கும் லியோ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.