ரசிகர்களே முதலில் என்னை நம்புங்கள் அடுத்த படத்தை சூப்பராக எடுத்துக் காட்டுகிறேன் – உறுதியளித்த விக்னேஷ் சிவன்

ajith and vignesh shivan

நடிகர் அஜித்குமார் அண்மைகாலமாக இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு அள்ளிக் கொடுக்கிறார். அந்த வகையில் ஹெச் வினோத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்க உள்ளார். நடிகர் அஜித் வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 61 வது படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்.

அதுவும் இந்த வருடம் தீபாவளிக்கு இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதனால் இந்த படத்தை எடுக்க  மொத்தம் 75 நாள் தான் அவகாசம். அதில் 32 நாட்கள் படமாக்கப்பட்டு விட்டன மீதி நாட்களில் படத்தை எடுத்து முடிக்க படக்குழு அதிவேகமாக வேலை செய்து வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் உடன் முதல்முறையாக இணைந்து தனது 62 வது திரைப்படத்தில் அஜீத் நடிக்க இருக்கிறார் அதற்கு முன்பாக இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதியை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல்  என்ற படத்தை எடுத்து இருந்தார். படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

டாப் நடிகர் நடிகைகளை வைத்து இப்படி ஒரு படத்தை கொடுத்தது ரசிகர்களிடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதால் இவர் அஜித்தின் 62 வது படத்தை இயக்க போவதால் ரசிகர்கள் ஒரு பக்கம் அஜித்தின் வலிமை திரைப்படமும் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளதால் அஜித்தின் அடுத்த அடுத்த படமான 61, 62 படத்தை ஹிட் கொடுக்க அஜித்தும் அவரது ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதனால் அஜித்தின் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் முந்தைய படம் போல் எடுத்து விட்டால் மிக தவறாக போய்விடும் என புலம்ப ஆரம்பித்துள்ளனர். இப்படி இருக்கின்ற  நிலையில் விக்னேஷ் சிவன் கூறி உள்ளது. அஜித்துடன் இணையும் படத்தை சிறப்பாக எடுப்பேன் நூறு சதவீத உழைப்பை போடுவேன் அஜித் சாரின் ரசிகர்கள் அவர்மீது மிகுந்த அன்பு வைத்துள்ளனர்.

ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் நான் இந்த படத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமும் பொறுப்பும் எனக்கு உள்ளது. மேலும் அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இந்த படத்தில் இருக்கும். படத்தின் ஸ்கிரிப்ட்டை முடித்த பிறகு நடிகர் நடிகைகளை தேர்வு செய்து ஒரு நல்ல டீமை அமைத்து முழு கவனம் செலுத்தி ஒரு நல்ல படத்தை கொடுக்க முடியும் என நம்புகிறேன் என விக்னேஷ் சிவன் உறுதி அளித்துள்ளார்.