நடிகை நந்திதா ஸ்வேதா தினேஷ் நடிப்பில் வெளியாகி அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் இவர் அந்த திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
அட்ட கத்தி திரைப்படத்தை தொடர்ந்து நந்திதா ஸ்வேதா அவர்களுக்கு பல படவாய்ப்புகள் அமைந்தது. அதனைத் தொடர்ந்து எதிர்நீச்சல் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார்.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் குமுதா ஹாப்பி அண்ணாச்சி என்ற வசனம் மிகவும் பிரபலம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த நந்திதா ஸ்வேதா சமீபகாலமாக கவர்ச்சியில் ஊடுருவி வருகிறார்.
இந்த நிலையில் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர் ஒருவர் வெளிப்படையாக நந்திதா ஸ்வேதா அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த நபரின் கேள்வியானது நடிகைகள் எப்பொழுதும் பட வாய்ப்புக்காக தங்களது உடலை காட்டுகிறீர்கள் இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்.. என கேள்வி எழுப்பியுள்ளார். அதுமட்டுமல்லாமல் நீங்கள் அதுபோல் செய்கிறீர்களா.? என கேள்வி கேட்டார்.
அதற்கு பதிலளித்த நந்திதா ஸ்வேதா முதலில் நடிகைகள் வாய்ப்புக்காக தங்களுடைய உடலை காட்டுவதில்லை படத்தில் நடிக்கும் கதாபாத்திரத்திற்காக மட்டும்தான் அப்படி நடிக்கிறோம் என அதிரடியாக தன்னுடைய கருத்தை வெளியிட்டார்.
அதைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுகிறீர்கள் அது எந்த கணக்கு என அடுத்த கேள்வியை எழுப்பி சமூக வலைதளத்தை போர்க்களமாக மாற்றிவிட்டார்கள்.