இன்ட்ரவலுக்கு பிறகு இருக்கையின் நுனியில் அமர போகும் ரசிகர்கள்..! வலிமை பற்றி ஸ்டன்ட் மாஸ்டர் வெளியிட்ட தகவலால் மிரளும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் தற்போது வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தல அஜித் இவர் சமீபத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் இவ்வாறு உருவாகும் இத்திரைப்படத்தினை வினோத் அவர்கள் தான் இயக்கி வருகிறார்.

மேலும் இந்த திரைப்படமானது சுமார் இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்து வருவதன் காரணமாக இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகுந்ததுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் பிரபல போனிகபூர் தயாரிப்பு நிறுவனம்தான் தயாரித்து வருகிறது.

மேலும் இத் திரைப்படத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா அவர்கள் பணியாற்றி வருகிறார் மேலும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றும் மிக பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் திலீப் சுப்பராயன் என்ற ஸ்டன்ட் இயக்குனரை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பைக் ஸ்டன்ட் காட்சிகள் அனைத்துமே மிகவும் உண்மையானதாகவும் டூப் இன்றியம் எடுக்கப்பட்டுள்ளதாக நமது ஸ்டண்ட் மாஸ்டர் அவர்கள் தெரிவித்துள்ளார். இவ்வாறு இந்த காட்சிகளை எடுப்பதற்கு தல அஜித் மிகவும் கஷ்டபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்திற்கு விடப்படும் 14 முதல் 13 நிமிடங்கள் வரையிலான இண்ட்ரவல் நிமிடத்தில் அடுத்த காட்சி என்னவாக இருக்கும் என மிகவும் பரபரப்பாக இருப்பது மட்டுமல்லாமல் தியேட்டரில் ரசிகர்கள் நுனி சீட்டில் உட்கார்ந்து கொண்டு பார்க்கும் அளவிற்கு மிகவும் பயங்கரமாக இருக்கும்..

valimai-01
valimai-01

அந்தவகையில் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகலாம் என நமது ஸ்டண்ட் மாஸ்டர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் வருகின்ற 2022ஆம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வலிமை திரைப்படம் திரையில் உதயமாக இருப்பதை தொடர்ந்து ஸ்டண்ட் மாஸ்டர் இவ்வாறு இத்திரைப்படத்தை பற்றி பேசியது ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டது.