விஜே மகாலட்சுமி பதிவு செய்த தகவலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.! அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி..

vj-mahalakshmi
vj-mahalakshmi

விஜேவாக சின்னத்திரைக்கு அறிமுகமாகி தற்பொழுது பல தொலைக்காட்சிகளில் ஏராளமான சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மகாலட்சுமி. சீரியலில் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் பெரிதாக படங்களில் இவருடைய கேரக்டர் பிரபலம் அடையவில்லை.

ஆனால் இவருக்கு சின்னத்திரையில் தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்நிலையில் கடந்த ஆண்டு மகாலட்சுமி தயாரிப்பாளரும், யூடியூப்பருமான ரவீந்தர் சந்திரசேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் பிறகு தன்னுடைய முதல் கணவரை 2019ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

எனவே தன் மகன் மற்றும் பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்த நிலையில் பிறகு தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் அனைத்தையும் சமாளித்து மகாலட்சுமி தொடர்ந்து தங்களுடைய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ள தகவல் நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மகாலட்சுமி பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதா கூறிய நிலை மேலும் இது போலியான கணக்கு என்றும் அதிலிருந்து எந்த மெசேஜ் வந்தாலும் ரெஸ்பான்ஸ் செய்யாதீர்கள் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இதனை தெரிந்துக் கொண்ட நெட்டிசன்கள் சிலருக்கு அவசரமாக ஐம்பதாயிரம் ரூபாய் பணம் வேண்டும் என மெசேஜ் வந்ததாகவும் ரிப்போர்ட் செய்துள்ளார்கள். இவ்வாறு சமீப காலங்களாக ஆன்லைன் மோசடி அதிகரித்து வரும் நிலையில் தற்போது மகாலட்சுமி பெயரிலும் போலி கணக்கு தொடங்கப்பட்டிருக்கும் சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.