கிளாசிக் டான்சராக தனது சினிமா பயணத்தை தொடர்ந்த பிரபுதேவா போகப்போக நடிப்பு இயக்கம் தயாரிப்பு போன்றவற்றில் கால்தடம் பதித்து வெற்றியை கண்டார் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா தொடர்ந்து படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.
காதலன் படத்தில் ஹீரோவாக நடித்து தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார் முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைந்தது அதனை தொடர்ந்து பிரபு தேவா தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தார் அந்த வகையில் மின்சார கனவு, வி ஐ பி, லவ் ஸ்டோரி, காதலா காதலா, சுயவரம், வானத்தைப்போல, உள்ளம் கொள்ளை போகுதே..
போன்ற சிறப்பான படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் இயக்குனர் அவதாரம் எடுத்து போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல் போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டார் ஆனால் அண்மை காலமாக மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார் இருந்தாலும் பெருமளவு அவரது படங்கள் வெற்றியை பெறவில்லை இருப்பினும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
தற்பொழுது கூட இவர் மை டியர் பூதம் மற்றும் ஒரு சில புதிய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் பிரபுதேவா சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் அப்பொழுது அவரிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதில் ஒன்றாக உங்களது பயோபிக்கில் ரித்திக் ரோஷன், அல்லு அர்ஜுன், விஜய் இவர்களில் யார் நடித்தால் சிறப்பாக இருக்கும் என கேட்டுள்ளனர்.
அதற்கு பிரபுதேவா முதலில் விஜய் வேண்டாம் என தெரிவித்து விட்டார் பின் அது அவங்களோட ஸ்டைல் நம்ம எதுவும் முடிவெடுக்க முடியாது. மூன்று பேருமே மிகப்பெரிய நடிகர்கள் தான் அவர்கள் என்னுடைய பயோபிக்கில் நடிக்கிறதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என தெரிவித்தார் பிரபு தேவா.