டிக் டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து தற்போது சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் அப்படி இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஒன்று தற்போது வெளிவர காத்திருக்கிறது இந்த நிலையில் ஜி பி முத்து அவர்களை போலீஸார்கள் கைது செய்வது போன்று ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
டிக் டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து கடந்த மாதம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இவர் கலந்து கொண்ட முதல் வாரமே பிக் பாஸ் வேற லெவலில் இருந்தது ஆனால் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இரண்டாவது வாரத்திலேயே வெளியேறினார் ஜி பி முத்து. தனது மகனை காண வேண்டும் என்பதற்காக ஜிபி முத்து அவர்கள் பிக் பாஸை விட்டு வெளியேற பிக் பாஸ் இடம் கேட்டுக்கொண்டார்.
நடிகர் கமல் அவர்கள் ஜி பி முத்துவை சமாதானப்படுத்தி கேட்டுப் பார்த்தார் ஆனால் தன் மகன் மீதுள்ள பாசத்தால் அவர் பிக் பாஸை விட்டு தானே முன்வந்து வெளியேறினார் இப்படி பிக் பாஸை விட்டு வெளியேறிய ஜிபி முத்து அவர்களுக்கு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.
இந்த நிலையில் ஜிபி முத்து அவர்கள் படம் பிரமோஷன் வேலைகளையும் செய்து வருகிறார் அப்படி சமீபத்தில் இவர் லவ் டுடே திரைப்படத்திற்காக பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோவை தனது youtube சேனலில் பதிவு செய்தார் இந்த வீடியோ செம வைரலானது அதனை தொடர்ந்து தற்போது பரோல் என்ற திரைப்படத்தின் பிரமோஷனுக்காக ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
அந்த வீடியோவின் ஆரம்பத்தில் போலீசார் ஜிபி முத்துவை கைது செய்வது போல் காட்சிகள் அமைந்திருக்கும் அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அந்த போட்டோவை இணையத்தில் வெளியிட்டு உள்ளார்கள் இந்த போட்டோவை பார்த்த ஜிபி முத்துவின் ரசிகர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டாரா என்று அதிர்ச்சியில் உள்ளனர் ஆனால் இது ஒரு பிரமோசன் வீடியோவில் புகைப்படம் என்பது தற்போது தான் தெரிய வருகிறது இதனால் பெருமூச்சு நிம்மதி அடைகின்றனர் ஜி பி முத்துவின் ரசிகர்கள்.