தமிழ் சினிமா உலகில் இளம் நடிகைகள் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது அந்த வகையில் கன்னட சினிமாவில் ஓரிரு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. இவருக்கு சினிமா உலகில் காலடி எடுத்து வைக்கும் போது 18 வயது தான்.
இருப்பினும் ஆள் பார்ப்பதற்கு பெரிய ஹீரோயின் போல் இருப்பதால் வாய்ப்புகள் தற்போது ஏராளமாக குவிகிறது. படத்துக்கு ஏற்றவாறு தனது திறமையையும் சூப்பராக வெளிகாட்டி வெற்றி மேல் வெற்றியை குவித்து வருகிறார் தற்போது நடிகை கீர்த்தி ஷெட்டி தமிழ் பக்கம் திசை திரும்பி உள்ளார்.
இப்பொழுது சூர்யா – பாலா கூட்டணியில் உருவாகி வரும் வணங்கான் திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். சிறந்த படைப்பாளி என கருதப்படும் பாலா தனது படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிகர் நடிகைகளை நடிக்க வைப்பதால் பெரும்பாலும் நடிகர் நடிகைகள் அவரது படத்தில் அழுக்கான சட்டை மற்றும் முகமே தெரியாத அளவுக்கு தான் நடிப்பார்கள்.
ஆனால் முதல் முறையாக வணங்கான் திரைப்படத்தில் மட்டும் ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி தேவதை போல் ஜொலிப்பது போல அமைத்துள்ளாராம். இதனால் முதல் படமே அவருக்கு மிகப்பெரிய ஒரு வெற்றிப் படமாகவும் நல்ல வரவேற்பு பெரும் என தெரிய வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை கீர்த்தி ஷெட்டி தெலுங்கு விழா ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் சொல்லி உள்ளது.
எனக்கு தற்பொழுது பாலிவுட் பக்கத்திலிருந்து வாய்ப்புகள் நிறைய வந்தது ஆனால் அதை எல்லாம் நான் நிராகரித்து விட்டேன். எனக்கு இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழியில் நல்ல கதைகள் உள்ள படங்களில் நடிக்க தான் ஆசை என தெரிவித்துள்ளார். இளம் வயதிலேயே இவ்வளவு பட வாய்ப்பு அவருக்கு குவிவது ரசிகர்களுக்கு தற்போது ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.