நடிகர் சத்யராஜ் தனது சினிமா பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் ஹீரோவாக மட்டும் நடிக்காமல் குணச்சித்திர கதாபாத்திரம், கெஸ்ட் ரோல், வில்லன் என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மனதில் நிரந்தர இடத்தை பிடித்தார்.
தற்பொழுது கூட நடிகர் சத்யராஜுக்கு வாய்ப்புகள் ஏராளமாக குவிந்த வண்ணமே இருக்கின்றன ஆம் அண்மையில் கூட ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான வீட்டுல விசேஷம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் கண்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டினார் அதனை தொடர்ந்து தற்பொழுது பல்வேறு பட வாய்ப்புகள் கைவசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்யராஜை தொடர்ந்து அவரது மகன் சிபிராஜும் சினிமா உலகில் தொடர்ந்து நடித்து வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மயோன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்லா வரவேற்பு பெற்று தற்போது சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் வெளி வருவதாகவும் படக்குழு தற்பொழுது அறிவித்துள்ளது.
இப்படி அப்பா மகன் இருவரும் தமிழ் சினிமாவில் நடித்து அசத்தி வருகின்றனர். இவர்கள் இப்படி இருக்க மறுபக்கம் நடிகர் சத்யராஜின் மகள் ஒரு பல் மருத்துவராக இருந்து சேவை செய்து வருகிறார் இப்படி அனைவரும் ஏதோ ஒரு வகையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சத்யராஜ் குன்னூரில் ஒரு மிகப்பெரிய பங்களா ஒன்றை சொந்தமாக கட்டி வைத்துள்ளார்.
அந்தப் புகைப்படத்தை சத்யராஜின் மகள் அண்மையில் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சற்று நேரம் பிரமித்து போனார்கள் அந்த அளவிற்கு மிக சூப்பராக அந்த கட்டிடம் உள்ளது டாப் நடிகர்கள் கூட இப்படி ஒரு இடத்தில் இது போன்ற ஒரு பங்களாவை கட்டி இருக்க மாட்டார்கள் என கூறி ரசிகர்கள் வியப்பில் பார்த்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.