வீடா இல்ல மாளிகையா.. ஹன்சிகாவின் வீட்டை பார்த்து பிரமித்து போன ரசிகர்கள்.!

hanshika
hanshika

சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக கால் தடம் பதித்து பின் பருவ வயதை எட்டிய பிறகு சினிமாவில் ஹீரோயினாக நடிக்க தொடங்கியவர் நடிகை ஹன்சிகா. தமிழில் இவர் மாப்பிள்ளை என்னும் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படமே வெற்றி படம் அதன் பின் இவர் தேர்ந்தெடுத்த திரைப்படங்களும் பிரம்மாண்டமான வெற்றியை ருசித்ததால் உடனடியாகவே..

இவர் முன்னணி நடிகை லிஸ்டில் சேர்க்கப்பட்டார் மேலும் ரசிகர்களும் இவருக்கு கிடுகிடுவென உருவாகினர். ரசிகர்கள் இவரை செல்லமாக குட்டி குஷ்பு என அழைத்தும் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா உலகில் வெற்றியை மட்டுமே கண்டு கூடிக் கொண்டிருந்த இவர் திடீரென தனது உடல் எடையை குறைப்பதற்காக சில காலம் சினிமா பக்கம் தென்படாமல் இருந்தார்.

ஒரு வழியாக தற்போது உடல் எடையை குறைத்து மாடல் அழகி போல் வந்துள்ளார். அவரது அழகை பார்த்து இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் வாய்ப்பை அள்ளி கொடுக்கின்றனர். தற்பொழுது ஹன்சிகா கையில் ரவுடி பேபி மற்றும் பெயரிடப்படாத மூன்று படங்களில் கமிட்டாகி உள்ளார் இது தவிர வெப் சீரிஸ் பக்கத்திலும் களம் இறங்கி நடிக்கிறார்.

இதனால் ஹன்சிகாவின் சினிமா பயணம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சினிமா உலகில் வெற்றியை கண்டு ஓடிக்கொண்டிருக்கும் இவர் மற்ற நடிகைகள் போல இவரும் youtube சேனல் ஒன்றை ஆரம்பித்து வீடியோக்களை அள்ளி வீசி அசத்துகிறார் தற்பொழுது கூட தனது வீட்டை வீடியோ எடுத்து காட்டி உள்ளார்.

வீடியோவை பார்த்த ரசிகர்கள் வியந்து போய் உள்ளன வீடா இது மாளிகைபோல் இருக்கு என கூறி அசந்து போய் சொல்லி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் நடிகை ஹன்சிகாவின் அந்த அழகிய வீட்டை..