தமிழ் சினிமாவில் பிதாமகன் திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தவர் நடிகை சங்கீதா. இவர் கவர்ச்சி நடிகை,குணச்சித்திர நடிகை, துணை நடிகை போன்ற கேரக்டரில் பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் கவர்ச்சி நடிகையாக உயிர் என்ற திரைப்படத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி பிரபலமடைந்தார். பின்பு பிரபல பாடகரான கிரிஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
கிரிஷ்சும் சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசு கலைமாமணி விருது பல திரைப்பிரபலங்களுக்கு கிடைத்தது. அந்த பட்டியலில் சங்கீதாவும் இடம் பெற்றிருந்தார்.
அரசு கலைமாமணி விருது பெற்ற சங்கீதா மகிழ்ச்சியுடன் தனது புகைப்படங்களை இணையத்தில் வெளிட்டுள்ளார். அப்புகைப்படத்தில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகை சங்கீதாவிற்கு இவ்வளவு பெரிய மகளா என்று ஆச்சிரியப் பட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.