தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்பொழுது எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் துணிந்து நடித்து வருகிறார். அதனால் நடிகை சமந்தாவுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் தற்போது குவிந்து உள்ளது. புஷ்பா, காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படங்களை தொடர்ந்து நடிகை சமந்தாவுக்கு..
யசோதா, சகுந்தலம் மற்றும் ஹிந்தியில் இரண்டு மூன்று பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தொடர்ந்து யசோதா திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். சமந்தா நடிக்கும் யசோதா திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் திரில்லர் படமாக உருவாகி வருகிறது என கூறப்பட்டது அதை உறுதிப்படுத்தும்.
வகையில் பட குழு இந்த படத்தில் மிகவும் ஆபத்தான காட்சிகள் எல்லாம் வைத்திருக்கிறாராம் இந்த நிலையில் நடிகை சமந்தா அது போன்ற காட்சிகளில் நான் டுபே போடாமல் நடிக்கிறேன் எனக் கூறி பட குழுவை அதிர வைத்துள்ளார். படக்குழு எவ்வளவோ பேசி பார்த்தது ஆனால் சமந்தா டூப் வெச்சி எல்லாம் பண்ணக்கூடாது நானே நடிக்கிறேன் என ஒத்த காலில் இருந்ததால்..
வேறு வழி இல்லாமல் அந்தக் காட்சிகளில் தூக்கம் இல்லாமல் நடிகை சமந்தா துணிந்து உயிரை பனையம் வைத்து அந்த காட்சியில் நடித்து முடித்து உள்ளாராம். யசோதா படத்தில் அந்த காட்சி அனைவரையும் பிரமிக்க வைக்கும் என சொல்லப்படுகிறது இதனை அறிந்த ரசிகர்கள்.
சமந்தா மேடம் உங்களுக்கு பின்னால் லட்சக்கணக்கான ரசிகர்கள் நாங்க இருக்கிறோம் இப்படி எங்களை நினைத்து கூட பார்க்காமல் நீங்கள் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கிறீர்களே இது எல்லாம் வேண்டாம் மேடம் என நீங்கள் பார்த்து பத்திரமாக வேலை செய்யுங்கள் அது போதும் எனக்கூறி அவருக்கு அறிவுரை சொல்லி வருகின்றனர்.