தல அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்துவருகிறார் இந்த படம் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ரசிகர்கள் வலிமை படத்தை பற்றி ஏதாவது ஒரு அப்டேட் கொடுங்கள் என சில மாதங்களாகவே சமூக வலைதள பக்கங்களில் கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.
அஜித் நடிக்கும் இந்த திரைப்படத்தை போனிகபூர் தான் தயாரித்து வருகிறார். மேலும் வலிமை திரைப்படத்தை பற்றி அப்டேட் கொடுங்கள் என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் மிகவும் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள்.
சில நாட்களாகவே வலிமை படத்தைப் பற்றி ஏதாவது ஒரு அப்டேட் விடச்சொல்லி போஸ்டர் மற்றும் பேனர் வைத்து வந்தனர்.
ஒரு சில நாட்களுக்கு முன்புதான் மதுரை தல ரசிகர்கள் வலிமை படத்தை பற்றி அப்டேட் கொடு என போஸ்டர் அடித்து சுவற்றில் ஒட்டி இருந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் போனி கபூர் புகைப்படத்தை வைத்து உயர்திரு போனிகபூர் அவர்களே கடந்த எட்டு மாதங்களாக தல 60 வலிமை படத்தைப்பற்றி அப்டேட் காணவில்லை தூங்காநகரம் அஜித் ஃபேன்ஸ் என்று போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளார்கள்.
இது அந்த புகைப்படம்