சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளாக சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் திரைப்படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வதோடு மட்டுமல்லாமல் அடிக்கடி சைக்கிளிங் செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.
இவ்வாறு ஃப்ட்னஸ்சாக இருக்க வேண்டும் என ஆர்வமுடன் இருந்து வரும் இவர் அதே நேரத்தில் தன்னுடைய மகன்களையும் கவனித்து வருகிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிறந்தனர்.
விவாகரத்திற்குப் பிறகு இருவரும் தங்களுடைய சினிமா வாழ்க்கைகள் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் ஒருபுறம் தனுஷ் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அதே போல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கும் லால் சலாம் திரைப்படத்தின் இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர்.
இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்து வந்தாலும் கூட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடர்ந்து அதிகாலை எழுந்து தூங்க போவதற்குள் பல ஒர்க் அவுட்டுகளை செய்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ரசிகர்கள் பலரும் இவருக்கு அறிவுரை கூறிய வருகிறார்கள். அதாவது பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வந்த நிலையில் இவருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோபிளாஸ்டிக்ஸ் செய்திருக்கிறார் இது குறித்த அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர ரசிகர்கள் அதிர்ச்சடைந்துள்ளனர்.
எனவே சினிமா ரசிகர்கள் ஐஸ்வர்யாவுக்கு அறிவுரை கூறிய வருகின்றனர். அதில் ஐஸ்மா நீங்க ரொம்ப ஓவரா வொர்க் அவுட் செய்து வரீங்க இது கொஞ்சம் கூட நல்லது கிடையாது எனவே ஒர்க் செய்வதை குறைத்துக் கொள்ளுங்கள் மேலும் வொர்க் அவுட் செய்யும் பிரபலங்கள் தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டு அடுத்தடுத்து இறந்து வருகிறார்கள் என கூறி வருகின்றனர்.