புகழ் ரம்யா பாண்டியன் குறித்து அதிரடி கருத்து சொன்ன ரசிகர். பவித்ரா கூறிய அறிவுரை..

pavithra-and-pukazh

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது உலகம் முழுவதும் இருக்கும் பலரை வெகுவாக கவர்ந்த நிகழ்ச்சி குத் கோமாளி தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட இந்நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்று கூறப்படுகிறது.தற்பொழுது முதல் சீசனை விட இரண்டாவது சீசன் தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் முதல் சீசனில் கலந்துகொண்ட வனிதா, ரம்யா, ரேகா, உமா ரியாஸ்  போன்ற அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டார்கள். புகழ் ரம்யா பாண்டியனிடம் இருந்து தான் ரொமான்ஸ் செய்யும் சேட்டையை தொடர ஆரம்பித்தார். பிறகு சீசன்1 முடிந்த நிலையில் 2 ஆரம்பித்தது அதிலிருந்து தர்ஷா குப்தா, பவித்ரா இருவருடனும் ரொமான்ஸ் செய்து தனது சேட்டையை ஆரம்பித்தார்.

தர்ஷா குப்தா சில வாரங்களுக்கு முன்பு இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பவித்ரா கலந்து கொள்ளவில்லை. எனவே புகழ் ரம்யா பாண்டியனை ரொமான்ஸ் செய்துவந்தார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் புகழ் மற்றும் பவித்ரா இருவரும் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு எனக்கு இந்த ஜோடியை தான் பிடிக்கும் என்று கமெண்ட் செய்திருந்தார். பிறகு தயவு செய்து இனிமேல் ரம்யா பாண்டியனை ஜோடியாக சேர்க்காதீர்கள். அவர் இந்த வாரம் ஓவராக சீன் போட்டார் முதல் 45 நிமிடங்கள் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. உங்களுக்கு பவித்ரா தான் க்யூட் பேர் என்று கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து அதன் முக்கிய நோக்கம் உங்களை மகிழ்ச்சி படுத்துவது தான் தனிப்பட்ட முறையில் எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் நாங்கள் யாரும் அதை செய்வதில்லை ரம்யா மிகவும் இனிமையான நபர். முந்தைய சீசன் அனைத்து எபிசோடுகளையும் இப்போது தான் பார்த்தேன் ஒரு மணி நேர நிகழ்ச்சி வைத்து யாரையும் மதிப்பிடாதீர்கள் அனைவருக்கும் உங்கள் அன்பை கொடுங்கள் நீங்கள் இல்லாமல் நாங்கள் ஒன்றும் இல்லை நீங்கள் யாரையும் உருவாக்க முடியும் அழிக்கவும் முடியும் ஆனால் தயவு செய்து முடிந்தவரை அன்பை பகிருங்கள் என்று பவித்ரா கூறியுள்ளார்.

pavithra
pavithra