திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் நடிகைகளின் பிறந்தநாளை ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் கோலாகலமாக கொண்டாடுவதோடு மட்டுமில்லாமல் தன்னால் முடிந்த நலத்திட்ட உதவிகளையும் செய்வது வழக்கம் அந்த வகையில் சூர்யாவின் பிறந்தநாள் முன்னிட்டு நேற்று ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் சிறப்பாக கொண்டாடினர்.
நடிகர் சூர்யா தனது மனைவியுடன் சேர்ந்து எளிமையாக முறையில் பிறந்தநாளை கொண்டாடினார். சூர்யா ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் சிறப்பாக கொண்டாடினாலும் நலத்திட்ட உதவிகளை பெருமளவு செய்யமுடியாமல் போனது காரணம் கொரோனா தலைவிரித்து ஆடுவதால் ரசிகர்களும் சிம்பிள் ஆகவே கொண்டாடித் தீர்த்தனர்.
எப்படியோ சிறப்பாக கொண்டாடி எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக முடியும் என எதிர்பார்த்த நிலையில் நடிகையும், பிக்பாஸ் பிரபலமான சனம் ஷெட்டி நடிகர் சூர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் சனம் ஷெட்டியை விட சூர்யா குள்ளமாக இருக்கிறார் என பதிவிட்டு கமெண்ட் அடிக்க ஆரம்பித்தனர் இதை உடனடியாக கண்ட சனம் ஷெட்டி உயரத்தில் என்ன வித்தியாசம் அவரது திறமையில் தான் வெயிட் இருக்கிறது என ஸ்மார்ட்டாக கூறி அந்த பதிவுக்கு பதிலடி கொடுத்து அசத்தினார்.
இதை கண்ட சூர்யா ரசிகர்கள் சனம் ஷெட்டிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு அவரையும் புகழ்ந்து தள்ளி பேசி வருகின்றனர். இதோ சனம் ஷெட்டி சூர்யாவுடன் இருக்கும் அழகிய புகைப்படம்.
Surya va vida Sanam heightu https://t.co/QgII8NXq4m
— HBD Suriya (@Jokerboy2O) July 23, 2021