தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து தமிழ் மக்களுடைய அறிமுகமானவர் நடிகை யாஷிகா. பின்பு இவர் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அரைகுறை ஆடையில் வலம் வந்ததன் மூலம் பல்வேறு இளம் ரசிகர்களை தக்க வைத்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு யாஷிகாவிற்கு பல திரைப்பட வாய்ப்புகளும் குவிந்தன. அந்த வகையில் இருட்டு அறையில் முரட்டு குத்து, கடமையை செய், இவன் தான் உத்தமன், போன்ற பல திரைப்படங்களில் சிறப்பாக நடித்து சினிமாவில் தன்னை தக்க வைத்துக் கொண்டார். இப்படி படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வந்த சூழலில் ஒரு கட்டத்தில் இவர் பயங்கர விபத்தில் சிக்கிக்கொண்டார்.
இவரது தோழிகளுடன் இணைந்து காரில் சுற்றுப்பயணம் சென்ற போது அந்த கார். விபத்துக்குள்ளாகி யாஷிகாவின் நெருங்கிய தோழி உயிரிழந்த நிலையில் யாஷிகா பலத்த காயங்களுடன் சில மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அண்மையில் தான் யாஷிகா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது அவரது சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் யாஷிகா அவரது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களிடம் கேள்வி கேளுங்கள் என கூறியதை அடுத்து ரசிகர்கள் பலரும் யாஷிகா விடம் சில கேள்விகளைக் கேட்டு வருகின்றனர்.
அதில் ஒரு ரசிகர் நீங்கள் கன்னித்தன்மையா என கேட்டுள்ளார். அதற்கு நான் யாஷிகா என பதில் சொல்லியுள்ளார். இந்த செய்தி தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.