பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் இரண்டு மாடல் அழகிகளை சந்தித்த அபிநய் – ஷாக்கான ரசிகர் கூட்டம்.

abinay

சின்னத்திரை தொலைக்காட்சிகள் சமீபகாலமாக பிரம்மாண்ட பொருட்செலவில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதில் குறிப்பாக மக்கள் பலருக்கும் மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி சீசன் சீசனாக நடந்து வருகிறது. மேலும் அதனைத் தொடர்ந்து கமலஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது நடைபெறும் பிக் பாஸ் ஐந்தாவது சீசன்  இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. மேலும் இதில் சென்ற வாரம் 10 போட்டியாளர்கள் இருந்து வந்த நிலையில் நேற்று சற்றும் யாரும் எதிர்பார்க்காத வகையில் டபுள் எவிக்ஷன் நடைபெற்று அக்ஷரா மற்றும் வருண் இருவரும் வெளியேறியுள்ளனர்.

மேலும் அக்ஷரா மற்றும் வருண் இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டில் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள்.  அதனை அடுத்து இருவரும் இணைந்து வெளியேறியது போட்டியாளர்கள் மற்றும் மக்கள் என பலருக்கும் ஒரு பக்கம் சந்தோஷத்தையும் அளித்துள்ளது. தற்போது பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா, ராஜி, தாமரைச்செல்வி, சஞ்சீவ்,நிரூப், அமீர், சிபி, பாவனி போன்ற எட்டு போட்டியாளர்கள் உள்ளனர்.

இவர்கள் 8 போட்டியாளர்களும் டப் கன்டஸ்டன்ட் ஆவார்கள். மேலும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற உள்ளது. இந்த டாஸ்கில் வென்று யார் முதல் பைனலிஸ்ட் ஆக செல்ல உள்ளார் என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முன்னதாக வெளியேறிய அபிநய் அவருக்கு முன் வெளியேறிய  போட்டியாளரை  சந்தித்து புகைப்படத்தை எடுத்துக் கொண்டுள்ளார்.மேலும் அபிநய் சுருதி மற்றும் மதுமிதா ஆகிய இருவரை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை பாருங்கள்.

abinay
abinay