எப்படி உருட்டினாலும் வேலைக்கு ஆகலையே.! உடனடியாக நிறுத்த போகும் ரசிகர்களின் 3 ஃபேவரட் சீரியல்

vijay-tv
vijay-tv

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக சன் டிவி சீரியல்கள் தான் டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது இதன் காரணமாக விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறாத மூன்று சீரியல்களை விரைவில் முடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பேவரைட் சீரியலாக இருந்து வந்தாலும் மற்ற சன் டிவி, ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகள் தொடர்ந்து புதிய கதைய அம்சமுள்ள சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் சமீப காலங்களாக விஜய் டிவியில் நடித்து வந்த பிரபலங்கள் கூட சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் நான்கு இடத்தை சன் டிவி சீரியல்கள் தான் பிடித்தது.

அதில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ஐந்தாவது இடத்தினை பிடித்தது. பிறகு பாரதி கண்ணம்மா, ஈரமான ரோஜாவே போன்ற சீரியல்கள் அடுத்தடுத்து இடங்களை பிடித்தது. மேலும் சமீப காலங்களாக ஜீ தமிழ் தொடர்ந்து புதிய சீரியல்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் விஜய் டிவி டிஆர்பியில் பெரிதும் அடிவாங்கி வருகிறது.

எனவே விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பிரபலமடையாத மூன்று சீரியல்களை முடித்துவிட்டு பிறகு புதிய தரமான கதை அம்சமுள்ள முன்னணி பிரபலங்களை வைத்து சீரியல்களை உருவாக்கலாம் என முடிவு செய்துள்ளதாம். அந்த வகையில் நம்ம வீட்டு பொண்ணு, காற்றுகென்ன வேலி, மௌன ராகம் 2 ஆகிய சீரியல்களை விரைவில் முடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏனென்றால் இந்த மூன்று சீரியல்களும் இதுவரையிலும் டிஆர்பி ரேட்டிங் பிடிக்கவில்லை எனவே இந்த சீரியல்களை சிலர் மட்டுமே விரும்பி பார்த்து வரும் நிலையில் அவர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.