ரசிகர்களின் ஃபேவரைட் சீரியல் முடிவுக்கு வந்தது.? இறுதிநாள் வீடியோ.

vijay tv
vijay tv

விஜய் டிவியில் மாலை நேரத்தில் ஒளிபரப்பாகி மக்களின் மனம் கவர்ந்த சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர் தொடர். இதன் முதல் பாகம் சிறப்பாக ஒளிபரப்பாகியதை எடுத்து இரண்டாவது பாகம் தொடங்கியது இரண்டாவது பாகத்திலும் தொடர்ந்து ஹீரோவாக நடிகர் செந்தில் இரு வேடங்களில் நடித்து வந்தார்.

இதில் ஹீரோயினாக முதலில் ரக்ஷிதா நடித்து வந்தார் பின்பு இடையில் அவர் சில காரணங்களால் வெளியேற இந்த தொடரில் மகா கதாபாத்திரத்தில் மோனிஷா நடித்துள்ளார். இந்த தொடரில் செந்தில் இருவேடங்களில் நடித்து வரும் கதாபாத்திரமான மாயன் மற்றும் மாறன் இருவருக்கும் இடையே சில மோதல்கள்  ஏற்பட்டு கதையின் சுவாரஸ்யத்தை அதிகரித்தது.

மேலும் மாயன் தனது மூன்று தங்கைகளுக்கும் திருமணம் செய்து வைக்க பெரும் போராடி ஒரு வழியாக தற்போது மூன்று தங்கைகளுக்கும் திருமணம் ஆகிய நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் இறுதி கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் முழு சூட்டிங் நிறைவடைந்துள்ளது.

இதில் இறுதிநாள் சூட்டிங்கில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் பிரபலங்கள் இணைந்து கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடி உள்ளனர். அதில் இந்த சீரியலில் முதலில் கதாநாயகியாக நடித்து பாதியில் வெளியேறிய ரக்ஷிதாவும் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் இதில் காயத்ரியின் கணவனாக கத்தி கதாபாத்திரத்தில் நடித்து இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வெளியேறி..

பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் என்ற பட்டத்தையும் பெற்ற ராஜு ஜெயமோகனும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இதோ வந்த வீடியோ.