சிவகார்த்திகேயனால் செருப்பை கழட்டி அடித்துக்கொண்ட ரசிகர்.! வைரலாகும் வீடியோ

sivakarthikeyan
sivakarthikeyan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

பிரண்ட்ஸ் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு சர்தார் மற்றும் பிரின்ஸ் படங்கள் ஒன்றுடன் ஒன்று மோத உள்ளதாகவும் அதுமட்டுமல்லாமல் இந்த படங்களில் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது. சர்தார் மற்றும் பிரின்ஸ் ஆகிய இரண்டு படங்களும் முதன் முறையாக மோத இருந்தது இதனால் ரசிகர்கள் இந்த இரண்டு படங்களும் எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இப்படி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் வெளியான திரைப்படங்கள் தான் சர்தார் மற்றும் பிரின்ஸ். இந்த திரைப்படம் கடந்த 21ஆம் தேதி வெளியாகி உள்ளது இதில் சர்தார் திரைப்படம் வெளியாகிய நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

ஆனால் அதே தினத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் பிரண்ட்ஸ் திரைப்படம் கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு படங்களும் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது அதேபோல் பிரின்ஸ் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெருமானே எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

தொடர்ந்து இரண்டு படங்களில் வெற்றி பெற்று கொண்டிருந்த சிவகார்த்திகேயன் ஹாட்ரிக் வெற்றி பெறுவார்கள் என்று இருந்தனர் அதையெல்லாம் ஒரே நாளில் தவிடு பொடி ஆக்கிவிட்டது பிரின்ஸ் திரைப்படம். 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிரண்ட்ஸ் திரைப்படம் செலவு செய்த பட்ஜெட்டை கூட எடுக்க முடியாமல் திணறி வருகிறது. தற்போது வரை பிரின்ஸ் திரைப்படம் 23 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் பிரண்ட்ஸ் திரைப்படம் பார்த்த ஒரு இளைஞரிடம் பிரின்ஸ் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனம் செய்கையில் அவர் தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ…