சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சி மட்டும் வழக்கத்திற்கு மாறாக மற்ற தொலைக்காட்சிகளை காட்டிலும் பல புது புது வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்களை கொடுத்து அதன் மூலம் டிஆர்பியை பெறுகின்றன மற்றும் பல ரசிகர்கள் பட்டாளத்தையும் கவர்ந்திருக்கின்றன. அப்படி ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் வருவதற்கு முன்பே தெலுங்கு ஹிந்தி மலையாளம் போன்ற மொழிகளில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதன் பின்னணியில் ஒரு கட்டத்தில் தமிழிலும் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதனை கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். முதல் சீசன் சற்று தயக்கத்துடன் ஆரம்பித்து இருந்தாலும் மக்கள் மத்தியில் இதற்கு கிடைத்த வரவேற்பு கண்டு சீசன் சீசன் ஆக நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு சீசனும் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பேவரட் சீசன் ஆக அமைந்துள்ளன. அந்த வகையில் தற்போது வரை ஐந்து சீசன்கள் நிறைவு பெற்றுள்ளன ஆறாவது சீசன் கூடிய விரைவில் தொடங்க உள்ளது அதற்கான ப்ரோமோக்கள் ஒவ்வொன்றாக விஜய் டிவி வெளியிட்டு வருகின்றன. இதுவரை இல்லாத ஒரு அரிய வாய்ப்பாக ஆறாவது சீசனில் யார் வேண்டுமானாலும்..
கலந்து கொள்ளலாம் என்ற ஓர் அறிய வாய்ப்பை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் விஜய் டிவி போட்டியாளர்களை தேர்வு செய்து வருகின்றன அந்த வகையில் இதுவரை ரக்சன், டிடி, பாடகி ராஜலட்சுமி, விஜே அர்ச்சனா போன்ற பல பிரபலங்களும் இதில் கலந்து கொள்வார்கள் என செய்திகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
இவர்களைத் தொடர்ந்து தற்போது வந்த தகவலின் படி பிரபல youtuber ஜிபி முத்து பிக் பாஸ் ஆறில் கலந்து கொள்ள உள்ளார் என கிசுகிசுக்கப்படுகிறது. ஜி பி முத்து youtube-ல் பல வீடியோக்களை வெளியிட்டு மற்றும் அவரது பேச்சின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தவர். இவர் பிக் பாஸ் ஆறில் கலந்து கொண்டால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என தெரிய வருகிறது இருந்தாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை.