விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி இந்த சீரியல் சமீப காலங்களாக படு ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது ஏனென்றால் பாக்யாவிற்கு தனது கணவர் கோபி ராதிகாவுடன் தொடர்பில் இருப்பதை தெரிந்து கொண்ட பாக்யா தற்பொழுது விவாகரத்தை கொடுத்துள்ளார்.மேலும் பாக்கியா கோபியின் பிரச்சனைகள் தான் சமீப காலங்களாக ஒளிபரப்பு வருகிறார்கள்.
எப்பொழுது இவர்களுடைய சண்டை முடிவுக்கு வரும் எனவும் அடுத்தடுத்து கோபி என்ன முடிவு எடுப்பார் என மிகவும் விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் பாக்யா கோபியை விட்டு வெளியே போக சொன்ன நிலையில் இந்த வீட்டினை 40 லட்சம் போட்டு கட்டினேன் எனவே நீ அந்த பணத்தை தந்து விட்டால் நான் கிளம்புகிறேன் என கூறுகிறார்.
அதற்கு பாக்யா இன்னும் ஒரு வருடத்தில் நான் அந்த பணத்தை உங்களிடம் கொடுக்கிறேன் என சவால் விடுகிறார். இவ்வாறு மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய கோபி ராதிகாவின் வீட்டிற்கு சென்று என்னை வீட்டை விட்டு அனுப்பி விட்டார்கள் தற்பொழுது அனாதையாக நிற்கிறேன் நீயும் என்னை வேண்டாம் எனக் கூறிவிட்டால் செத்து விடுவேன் என கூறுகிறார்.
மேலும் ராதிகா தனக்காக வீட்டை விட்டு வெளியில் வந்து விட்டார் என யோசித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது அடுத்த எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பது தெரியவில்லை.
இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதாவது சமீப காலங்களாக தொடரில் நடிக்காமல் இருந்து வந்த அமிர்தா வேடத்தில் இப்பொழுது மீண்டும் கதையில் வருகிறது அந்த வகையில் பாக்யா மற்றும் அமிர்தா படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தங்களுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்கள்.