தற்பொழுது தளபதி 65 ஆவது திரைப்படத்தில் யார் வில்லனாக நடிக்க போகிறார் என்ற அப்டேட் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டிப் பறந்த வருபவர் நடிகர் தளபதி விஜய். இவர் தற்பொழுது லோகோ ராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து வசூல் வேட்டை அடைந்தது. அதுமட்டுமல்லாமல் படம் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதேபோல விஜய் சேதுபதியும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இப்படம் வெற்றி பெறுவதற்கு இவரும் ஒரு காரணமாக அமைந்து உள்ளார்.
இப்படத்தின் மூலம் விஜய் சேதுபதி வில்லன் கேரக்டரில் புதிதாக நடத்தி இருந்தாலும் மிகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து தற்போது தளபதி 65வது திரைப்படம் எடுக்க முதற்கட்ட நடவடிக்கைகள் நடந்து வருகிறது.அந்த வகை இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளாராம்.
இதனைத் தொடர்ந்து இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் இல்லையாம் ரூபாய் 1.5கோடி சம்பளத்துக்கு பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக அருண் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை ஆனால் அருண்விஜயின் விக்கிபீடியாவில் அவர் நடிக்க உள்ள திரைப்படங்களில் இப்படமும் இடம்பெற்றுள்ளது. இதனைப் பற்றிய அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.