ஒரு காலகட்டத்தில் சீரியல் என்றாலே மிகவும் பிரபலமான தொலைக்காட்சி என்றால் அது சன் தொலைக்காட்சி தான். மாலை 6:00 மணி ஆகிவிட்டாலே சன் தொலைக்காட்சி பார்ப்பதற்கு இல்லத்தரசிகள் ஆர்வத்துடன் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு டிவி முன்பு அமர்ந்து விடுவார்கள். அந்த நிலைமை மாறி தற்போது எல்லா தொலைக்காட்சிகளிலும் தொடர்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது அதிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம்.
அந்த வகையில் பாக்கியலட்சுமி, மௌன ராகம், ராஜா ராணி என பல சீரியல்களை சொல்லிக் கொண்டே போகலாம். மாலை நேரங்களில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் இளைஞர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது அது மட்டும் இல்லாமல் வீட்டுப் பெண்களையும் கவர்ந்து வருகிறது.
இந்த நிலையில் தற்பொழுது ஒரு தொலைக்காட்சி சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. அதாவது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்களில் ஒன்றும் மௌன ராகம் 2 இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிய போவதாக தகவல் கிடைத்துள்ளது.
இதைப் பார்த்த ரசிகர்கள் சீரியல் நன்றாக தானே ஓடிக்கொண்டிருக்கிறது எதற்காக அதற்குள் முடிவுக்கு கொண்டு வருகிறீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் சமீப காலமாக விஜய் தொலைக்காட்சியில் நடித்து வரும் பல பிரபலங்கள் சீரியலை விட்டு வெளியேறி வருகிறார்கள் அந்த வகையில் சமீபத்தில் பிரபல சீரியலின் இயக்குனர் சீரியலை விட்டு வெளியே வந்து விட்டதாக தகவல் கிடைத்தது.
இதலையில் மௌனராகம் சீரியல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்ததால் இந்த சீரியல் முடிவுக்கு கொண்டு வந்தால் டிஆர்பி இல் பலத்த மாற்றம் ஏற்படும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.