ரஜினிக்கு தங்கையாக நடிக்க வேண்டுமென அஜித் திரைப்படத்தை தூக்கி எறிந்த விஜய் பட நடிகை.! ஆனா இன்னைக்கு ஆலே அட்ரஸ் இல்லை.

vijay-ajith-rajini

1996 ஆம் ஆண்டு அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் காதல் கோட்டை இந்த திரைப்படத்தை இயக்குனர் அகத்தியன் இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தில் அஜித்குமார், தேவயானி, ஹீரா, ராசகோபால், மணிவண்ணன் தலைவாசல் விஜய் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படம் அஜித்தின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம். ஒரு காலகட்டத்தில் அஜித் பல தோல்வி  திரைப்படங்களை கொடுத்துக் கொண்டிருந்தார் அதன் பிறகு காதல் கோட்டை திரைப்படம் அஜித்திற்கு சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்ட திரைப்படமாக அமைந்தது.

இந்த திரைப்படத்தில் தேவயானி அஜித்திற்கு ஜோடியாக நடித்திருப்பார் ஆனால் அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது வேற ஒரு நடிகை. அதாவது தேவயானி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது பூவே உனக்காக திரைப்படத்தில் நடித்த அஞ்சு அரவிந்த் தானாம்.

இவர் சினிமா துறையில் 1991ஆம் ஆண்டு ‘வேணு கனவு’ என்ற மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக முதன் முதலில் அறிமுகமானார் அதன் பிறகு பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் விஜய் நடிப்பில் வெளியாகிய பூவேஉனக்காக திரைப்படத்தில் ஒன் சைடு காதலராக நடித்திருப்பார்.

kadhal-kottai
kadhal-kottai

மேலும் பூவே உனக்காக திரைப்படம் தான் அவருக்கு முதல் திரைப்படம் தமிழில் அதன் பிறகு அருணாச்சலம் ஒன்ஸ்மோர் எனக்கு ஒரு மகன் பிறப்பான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்தான் காதல் கோட்டை திரைப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க வேண்டியது.

அந்த சமயத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிய அருணாச்சலம் திரைப்படத்தில் தங்கையாக  நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததால் காதல் கோட்டை திரைப்படத்தை ஒரு பொருட்டாக மதிக்காமல் கைவிட்டுவிட்டார். ஆனால் அந்த திரைப்படத்தில் நடித்திருந்தால் இவரின் திரை வாழ்க்கை மாறி இருக்கலாம் என பலரும் கூறுகிறார்கள்.