கர்ணன் பட சாட்டிலைட் உரிமையை பிரமாண்ட தொகைக்கு தட்டிச்சென்ற சென்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.!

dhanush karnan
dhanush karnan

zee TV company that bought the rights to Karnan movie satellite : நடிகர் தனுஷ் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் திரைக்கு வர வேண்டியது ஆனால் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே போகிறது.

இதனைத்தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளார் இதற்கு முன் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், அதனால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

கர்ணன் திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது, மேலும் படத்தில் நடிகர் லால், யோகிபாபு, ராஜிஷி விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படம் சில சர்ச்சைகளை சந்தித்துள்ளது மேலும் திரைப்படத்தை தடை செய்யக்கோரி சிலர் காவல்துறையில் புகார் அளித்தார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான், இந்த நிலையில் இந்த திரைப் படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல ஜீ ஸ்டுடியோ நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.