சினிமாவில் உள்ள அனைத்து நடிகைகளும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்கள். மேலும் தொடர்ந்து ரசிகர்களுடன் கலந்துரையாடி வரும் நிலையில் பல நடிகைகளை பற்றிய அவதூறான தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்திருக்கிறது அந்த வகையில் தன்னை பற்றி அவதூறான பதிவால் பிரபல நடிகை செருப்பால் அடிப்பேன் என எச்சரித்து உள்ளார்.
அதாவது தெலுங்கு சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் அனுசுயா. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியினை பெற்ற புஷ்பா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மேலும் இதனை அடுத்து ராம்சரண் சமந்தாவுடன் இணைந்து ரங்கஸ்தலம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவ்வாறு சினிமாவையும் தாண்டி சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் அனுசுயா தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில் வாழ்க்கை அவரோடு சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் இதனைப் பார்த்த ரசிகர் ஒருவர் ‘அப்படியெல்லாம் இல்லை அவரிடம் நிறைய பணம் இருக்கிறது’ என்ற பதிவை பகிர்ந்தார்.
எனவே இதனைப் பார்த்து கடுப்பான அனுசுயா அவதூறான விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அது என்னடா தம்பி அப்படி சொல்லி விட்டாய், அவரிடம் எவ்வளவு இருக்கிறது. என்னிடம் பணம் இல்லையா, கன்னத்தில் போட்டுக் கொள் இல்லாவிட்டால் செருப்பால் உன் கன்னத்தில் அடிப்பேன் என்றார்.
இவ்வாறு இதற்கு பதில் அளித்த அந்த நபர், உண்மையை புரிந்து கொள்ள வேண்டும், நீங்கள் எவ்வளவு சொன்னாலும் உண்மை உண்மைதான் என்றார். இதற்கு அனுசுயா எல்லாம் தெரிந்த மாதிரி பேசாதே, உனக்கு என்ன தெரியும், மஞ்சள் காமாலை வந்தவன் கண்ணுக்கு உலகம் எல்லாம் மஞ்சளாகவே தெரியுமா உன் புத்தி பணத்தில் இருக்கிறது ஆனால் அனைவருக்கும் அப்படி இருக்காது. முடிந்தால் நல்லவனாக மாறு என்று பதில் அளித்துள்ளார். இவ்வாறு இவர்கள் இருவரும் சோசியல் மீடியாவில் சண்டை போட்டு வருகின்றனர்.