tamil Music Director : ஒரு படம் ஹிட் அடைகிறது என்றால் அந்தத் திரைப்படத்தின் கதை மட்டும் காரணம் என்று கூற முடியாது ஏனென்றால் கதை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் அதே அளவிற்கு படத்திற்கு மிக முக்கியமான ஒன்று இசை. பல திரைப்படங்கள் இசையாலையே வெற்றி பெற்றுள்ளன.
இசைக்காக மட்டுமே ஓடிய படங்கள் நம் தமிழ் சினிமாவில் இருக்கின்றன, அதுவும் தமிழ் சினிமாவில் ஒரு சில இசையமைப்பாளர் இசை அமைத்தால் அதனை பெரும்பாலும் ரசிகர்கள் விரும்பி கேட்பார்கள்.
இந்தநிலையில் தமிழில் உள்ள இசையமைப்பாளர்கள் தற்பொழுது உள்ள காலகட்டத்தில் அதிக சம்பளம் வாங்குகிறார்கள் அந்த வகையில் அதிக சம்பளம் இசையமைப்பாளர்களின் லிஸ்டை இங்கே பார்க்கலாம்.
முதலிடத்தில் ஏ ஆர் ரகுமான் இருக்கிறார் இவர் ஏழு கோடி வரை சம்பளமாக பெறுகிறார், அதேபோல் இரண்டாவது இடத்தில் இளம் இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் 3 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். மூன்றாவது இடத்தில் இளையராஜா 1.5 கோடி நான்காவது இடத்தில் யுவன் சங்கர் ராஜா 1.5 கோடியில் ஐந்தாவது இடத்தில் டி இமான் ஒரு கோடியும் சம்பளமாக பெறுகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து 6வது இடத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு கோடியும் ஏழாவது இடத்தில் சந்தோஷ் நாராயணன் 75 லட்சமும் எட்டாவது இடத்தில் ஜிவி பிரகாஷ் 75 லட்சமும் ஒன்பதாவது இடத்தில் ஹிப்ஹாப் ஆதி 50 லட்சமும் பத்தாவது இடத்தில் ஜிப்ரன் 50 லட்சமும் சம்பளமாக பெறுகிறார்கள்.
இனிவரும் இசையமைப்பாளர்கள் எந்த இடத்தை பிடிப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.