மாறு வேஷத்தில் ரசிகர்களுடன் ரசிகனாய் RRR திரைப்படத்தை திரையரங்கில் பார்த்த பிரபல தமிழ் நடிகர்.! இணையதளத்தில் வெளியான புகைப்படம்.

பிரமாண்ட இயக்குனர் என்று கூறியவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது ராஜமௌலி தான் இவர் பாகுபலி திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ஆர் ஆர் ஆர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியானது.

இந்த திரைப்படம் வெளியாகிய மூன்றே நாட்களில் 500 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூலித்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தின் பட்ஜெட்டை ஓவர்டேக் செய்து விரைவில் வெற்றித் திரைப்படமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மட்டும் விரும்பி பார்க்காமல் பல திரை பிரபலங்களும் திரைப்படத்தை பார்த்து கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல தமிழ் நடிகர் ஒருவர் ராஜமவுலி இயக்கிய RRR திரைப்படத்தை மாறுவேடத்தில் சென்று சென்னை திரையரங்கில் பார்த்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

அவர் வேறு யாரும் கிடையாது நடிகர் சந்தானம் தான் நடிகர் சந்தானம் தான் சென்னையில் உள்ள திரையரங்கில் ராஜமவுலியின் RRR திரைப்படத்தை மாறுவேடத்தில் சென்று ரசிகர்களுடன் ரசிகராய் பார்த்துள்ளார் அதுமட்டுமில்லாமல் அங்கு செல்பி புகைப்படம் எடுத்து அதனை சமூக வளைதளத்தில் பகிர்ந்துள்ளார் சந்தானம் திரைப்படத்தின் இயக்குனர் ரத்தினகுமார் .

அவர் வெளியிட்ட பதிவில் குலுகுலு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் ராஜாமவுளியின் RRR  திரைப்படத்தை சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் பார்ப்பதற்காக மாறுவேடம் போட்டு சென்றதாகவும் ரசிகர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அவர் இவ்வாறு செய்ததாகவும் குலுகுலு படத்தின் இயக்குனர் ரத்தினகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த வாரம் குலுகுலு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வைரல் ஆனது. இந்த நிலையில் சந்தானத்தின் அடுத்த படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.