கேஜிஎப்-2 பற்றி ஆஹா ஓஹோ என புகழ்ந்த பிரபல தமிழ் நடிகர்.! செம காண்டில் இருக்கும் விஜய் ரசிகர்கள்.!

kgf 2 movie news
kgf 2 movie news

ஏப்ரல் 14ஆம் தேதி கேஜிஎஃப் இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை பிரசாந்த் நீல்  இயக்கியிருந்தார் அதேபோல் யாஷ் அவர்கள் நடித்திருந்தார். இதன் முதல் பாகம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் இதன் இரண்டாம் பாகம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது அதேபோல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை படமும் பூர்த்தி செய்துள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் நடிகர் கார்த்திக் இவர் தற்பொழுது சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நடிகர் கார்த்தி  முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படமும் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.

இந்த நிலையில் தற்பொழுது கார்த்தி தன்னுடைய சமூக வலைதளமான டுவிட்டரில் போட்டுள்ள பதிவுதான் விஜய் ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கார்த்தி அவர்கள் கேஜிஎப் 2 திரைப்படத்தை புகழ்ந்தும் பாராட்டியும்  பதிவு ஒன்றை செய்துள்ளார் அதை பார்த்து தான் விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளார்கள்.

ஏனென்றால் விஜய் நடித்த திரைப்படம் குறித்து இதுவரை எந்த ஒரு பதிவும் வெளியிடாத கார்த்தி கே ஜி எஃப் திரைப்படத்தை மட்டும் புகழ்ந்து பதிவிட்டது விஜய் ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் விஜய் ரசிகர்கள் உங்கள் படம் தமிழ்நாட்டில்தான் ஓடப்போகிறது அதற்கு நாங்கள் தான் ஆதரவு கொடுத்தாக வேண்டும் அதை மறந்துவிட்டு கனட திரைப்படத்திற்கு இப்படி புகழ்ந்தது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.