KGF-2 படத்தில் நடித்துள்ள பிரபல தமிழ் நடிகர்.! ட்ரெய்லரில் இவரை கவனித்தீர்களா கொல மாஸ் என்ட்ரி.?

kgf 2
kgf 2

கன்னட சினிமாவை பெரிதாக யாரும் பேசி இருக்க மாட்டார்கள் ஆனால் 2018 ஆம் ஆண்டு யாஷ் நடிப்பில் வெளியாகிய திரைப்படம்தான் கேஜிஎப் இந்த திரைப்படம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது அந்த அளவு கனடா சினிமாவை தூக்கி நிருத்தியது KGF திரைப்படம். பல மொழிகளில் உருவாக்கிய KGF என்ற திரைப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. மேலும் KGF இரண்டாம் பாகத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும் டிரைலர் ரசிகர்களை பிரமிக்க வைத்தது இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

மேலும் இந்த திரைப்படத்திற்கு முன்பு விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி ரிலீசாக இருக்கிறது இந்த நிலையில் இரண்டு திரைப்படமும் நேருக்கு நேராக மோதிக் கொள்ள இருக்கின்றன. கே ஜி எஃப் திரைப்படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து விஜய் ரசிகர்களும் KGF  ரசிகர்களும் மோதிக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த நிலையில் ட்ரெய்லரில் ஒரு முக்கிய காட்சியில் பிரபல நடிகர் நடித்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் வேறு யாரும் கிடையாது சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்து வந்த சந்தோஷ் பிரதாப் என்பவர்தான் கேஜிஎப் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இவர் ‘கதை திரைக்கதை வசனம்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஆனால் அவருக்கு பெரிதாக அந்த திரைப்படம் கை கொடுக்கவில்லை என்றாலும் சார்பட்டா பரம்பரை திரைப்படம் இவருக்கு பெயரும் புகழும் பெற்று கொடுத்தது.

இந்த நிலையில் KGF இரண்டாம் பாகத்தில் டிரைலரின் தொடக்கத்தில் இவர் ஆக்ரோஷமாக நிற்பது போன்ற ஒரு காட்சிகள் இடம்பெற்றுள்ளது முதல் பாகத்தில் இவர் நடித்திருந்தாலும் கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அதுமட்டுமில்லாமல் இரண்டாம் பாகத்தில் வரும் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படும் எனவும் தெரிகிறது.

மேலும் நேற்றுக் KGF 2 திரைப்படத்தின் புரமோஷன் விழாவில் யாஷ் பேசினார் அப்பொழுது பீஸ்ட் திரைப்படத்துடன் கேஜிஎப் மோதப் போகிறது என்று சொல்வதை விட இரண்டு படங்கள் வெளியாகிறது என்று கூறலாம் நான் விஜய் சாரின் பெரிய ரசிகன் கண்டிப்பாக பீஸ்ட் படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் KGF திரைப்படத்திலிருந்து டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.