பூஜை போடப்பட்டு ஊத்தி மூடிய முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்.! அடேங்கப்பா லிஸ்ட் ரொம்ப லெந்தா போகுதே…

vijayakanth ajith-vijay-rajini-kamal

திரையுலகில் மிக பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட திரைப்படங்கள் ஒரு சில பிரச்சினையின் காரணமாக பாதியிலேயே நின்றுவிட்டது. ஒரு திரைப்படம் பாதியிலேயே நிற்பதற்கு முக்கிய காரணம் அப்படத்தின் கதை சரியில்லாத காரணத்தினால் தான்.

அந்த வகையில் பல முன்னணி தமிழ் நடிகர்களின் சில படங்களின் படப்பிடிப்புகள் பாதியிலேயே நின்றுவிட்டது. தற்போது எந்தெந்த நடிகர்களின் படம் பாதியிலேயே புஸ் என்று போய்விட்டது என்பதை பார்போம்,

ஜில்லா கலெக்டர் – நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி எஜமான் படத்தை நடித்து முடித்துவிட்டு ஆர்.வி உதயகுமார் டைரக்ஷனில் உருவாக்கப்பட்ட படம் ஜில்லா கலெக்டர் இப்படத்தின் கதை சொதப்பலாக இருந்த காரணத்தினால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இப்படத்தினை உருவாக்க வேண்டுமென கடுமையாக உழைத்து வந்தார்கள் ஆனால் கதை சொதப்பல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

jilla-collector-rajini-film
jilla-collector-rajini-film

ராஜா ராணி – தொண்ணூறுகளில் நடிகர் விஜயகாந்த் மற்றும் நடிகை விஜயசாந்தி  திரையுலகில் உச்சத்தில் இருந்த பொழுது இப்படத்தை உருவாக்க முயற்சி செய்தார்கள் ஆனால் பல பிரச்சனையின் காரணமாக பாதியிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பிறகு நடிகர் விஜயகாந்தும் நடிகை விஜயசாந்தி அவர்களும் ஒன்றாக வேறு படத்தில் நடிக்கவில்லை.

ஏலேலோ – டைரக்டர் பார்த்திபன் அவர்கள் பல படங்களை பாதியிலேயே விட்டு விட்டார். ஆனால் ஏலேலோ திரைப்படம் மிகவும் ஸ்பெஷலானது ஏனென்றால் இப்படத்தை ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் ஸ்டார்டிங்கின் போது ஒரு கிராமத்தாயே கூட்டிவந்து மிக பிரம்மாண்டமாக பூஜை போட்டு ஆரம்பித்தார்கள். பூஜை போட்ட அடுத்த நாளிலிருந்து இப்படத்தைப் பற்றி கண்டுகொள்ளாமல் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

என்ஜினீயர் – இப்படத்தில் நடிகர் அரவிந்த்சாமி மற்றும் மாதிரி ரிக்ஷித் என பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒன்றிணைந்தனர். இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்திருந்தார் மற்றும் காந்தி கிருஷ்ணா டைரக்சன் பண்ணியிருந்தார். இந்த நிலையில் இப்படத்தின் பட்ஜெட் அதிகமாக போன காரணத்தினால் பாதியிலேயே டிராக் பண்ணி விட்டனர்.

காக்கி – காக்கி இப்படம் ஹிந்தி  திரைப்படம் ஆகும். இப்படத்தில் நடிகர் சரத்குமார் போலீஸ் வேடத்தில் நடித்து வந்தார். இப்படமும் பட்ஜெட் காரணமாக பாதியிலேயே படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது.

ஜக்குபாய், ராணா – இந்த இரு திரைப்படங்கள் ரஜினிகாந்த் நடிக்க இருந்தார். இப்படத்தின் ஆரம்பத்தின் போது பூஜை, கட்டவுட் என பிரமாண்டமாக ஆரம்பித்தனர் ஆனால் கதையில் முக்கியமான ஒன்றை மறந்துவட்டனர் என்பதால் பாதியிலேயே கப்சிப் என படப்பிடிப்பை நிறுத்தி விட்டனர்.

மர்மயோகி,  தலைவன் இருக்கிறான்,  அமரதீபம் – இந்த மூன்று திரைப்படமும்  உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் திரையுலகிற்கு வெளிவந்திருந்தது வேண்டிய திரைப்படம். இத்திரைப்படத்திற்கு பூஜை ஷூட்டிங் என அமர்களமாக ஆரம்பித்தனர்.இந்த நிலையில் மர்மயோகி திரைப்படத்தில் நடிகை திரிஷா என்று கூறிவிட்டு அப்படத்தின் ஒரு சிறு புகைப்படத்தைக் கூட வெளிவராமல் இழுத்து மூடிவிட்டனர்.

தலைவன் இருக்கிறான் இப்படம் இன்றளவும் வருமா வராதா என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். தலைவன் இருக்கிறான் இத்திரைப்படத்தின் மூலம் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் கிடையாது. இதில் இன்னொரு முக்கியமான விஷயம் மர்மயோகி இத்திரைப்படதின் அரைமணிநேர படம் உள்ளது என்றும் இப்படத்தின் காட்சிகள் முழுமையாக முடிக்க பல கோடிபணம் தேவை என்றும் கமலஹாசன் கூறியுள்ளார் எனவே பணம் வரத்தின் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு மழைக்காலம்- முதலில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை அசின் வைத்து கௌதம் மேனன் ஆரம்பித்த திரைப்படம் சென்னையில் ஒரு மழைக்காலம். சூட்டிங் போய்க் கொண்டிருந்த நிலையில் சில பிரச்சனை காரணமாக பாதியிலேயே நிறுத்தி விட்டனர். இந்த நிலையில் சிறிது காலம் கழித்து நடிகை அசினுக்கு பதில் த்ரிஷாவை நடிக்க வைத்து சூட்டிங் நடந்து வந்தது த்ரிஷா நடித்து கொண்டிருக்கும் பொழுதும் கூட பாதியிலேயே படம் டிராப் ஆகிவிட்டது.

ஏசி – நடிகர் சிம்பு மற்றும் நடிகை அசின் நடிப்பில் எஸ் ஜே சூர்யா டைரக்ஷன் செய்த திரைப்படம் தான் ஏசி.இப்படத்தை பூஜை எல்லாம் போட்டு ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் படப்பிடிப்புகள் பாதிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது சிறிது காலம் கழித்து வரும் வரும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள் என்ன மாயம் மர்மம் என தெரியவில்லை இப்படத்தின் பேச்சு வார்த்தை நின்று விட்டது.

இதிகாசம் – தல அஜித் அவர்கள் சிட்டிசன் திரைப்படம் முடிந்தவுடனே இதிகாசம் திரைப்படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார் இப்படத்தினை சரவண சுப்பையா இயக்குவதாக விளம்பரங்கள் வெளிவந்தது. அதன்பிறகு இப்படத்தினைப் பற்றி எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இல்லை.

மகா – இப்படத்தையும் தல அஜித் அவர்கள் தான் நடிப்பதாக 15 ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தமாகியிருந்தார் .இப்படமும் பூஜை விளம்பரங்கள் என்று வெளிவந்தது விளம்பரத்தோடு சரி வேறு எந்த ஒருபடப்பிடிப்புகளும் இல்லை.

கெட்டவன், வேட்டை மன்னன் – சிம்புவின் திருவிளையாடல்களில் ஒன்று .சிம்புவை நடிக்க இருந்த பல படங்கள் ட்ராப்பாகி உள்ளது அதில் முக்கியமாக இந்த இரண்டும் தான். பூஜை விளம்பரம் கொஞ்ச நாள் சூட்டிங் என போய்க் கொண்டிருந்த நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களும் இரண்டு முறை முயற்சி செய்தும் டிராப் ஆகிவிட்டது.

டாக்டர்ஸ் – நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் இருவரும் இணைந்து உருவாக்கிய படம்தான் டாக்டர் இத்திரைப்படம் நான்கு டாக்டர்களை பற்றியக் கதை. இப்படத்தை பற்றி மிகவும் நன்றாக இருக்கும் என பேட்டிகள் கூட கொடுத்துள்ளனர். ஆனால் இப்படத்தினைப் பற்றி எந்த ஒரு செய்தியும் தற்போது வரையிலும் வெளிவரவில்லை.

யோகன் – நடிகர் தளபதி விஜய் மற்றும் கௌதம் மேனன் ஒன்றிணைந்து திரையுலகிற்கு அறிமுகமாக இருந்த படம்தான் யோகம். இப்படத்தின் பிச்சர்கள் மிகவும் ஸ்டைலாக இருத்தது.இத்திரைப்படத்தின் விளம்பரங்கள் வெளிவந்த பொழுது இதனைப் பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் காப்பியடித்து உள்ளார்கள் என்று பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இந்த நிலையில் விஜய் கதை பிடிக்கவில்லை கொஞ்சம் மாற்றுங்கள் என கூறினாராம் ஆனால் கௌதம் மேனன் ஆரம்பிக்கும்போதே செட் ஆகாது என்று படப்பிடிப்பை நிறுத்தி விட்டார்.

yogan