அதிதி என்னோட தங்கச்சி என சங்கர் மகளிடம் மன்னிப்பு கேட்ட பிரபல தமிழ் நடிகர்.!

aditi sangar

தற்பொழுது சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் நடிகை அதிதி சங்கர்.திரும்புமிடமெல்லாம் இவரை பற்றி பேசி வருகிறார்கள் மேலும் தற்பொழுது வாரிசு நடிகையாக இவர் சினிமாவிற்கு அறிமுகமான காரணத்தினால் தான் தொடர்ந்து இவருக்கு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருவதாக பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் அதிதி சங்கரை ஆவேசமாக பேசிய பிரபல தமிழ் நடிகர் ஒருவர் தற்பொழுது அதிதி எனக்கு தங்கச்சி மாதிரி என சங்கர் மகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது அதாவது சமீபத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் அதிதி ஷங்கர் இணைந்து நடித்துள்ள விருமன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

மேலும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்திக் மற்றும் அதிதி சங்கர் நடித்த விருமன் திரைப்படம் கடந்த 12ஆம் தேதி பல திரையரங்குகளில் வெளியானது முதல் நாள் காட்சியைப் பார்த்த பல பிரபலங்கள் இவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறியிருந்தார்கள்.

cool suresh
cool suresh

அந்த வகையில் விருமன் திரைப்படத்தை பார்த்துவிட்டு கூல் சுரேஷ் செய்தி வாசிப்பாளர்களிடம் பேட்டி அளித்தார் அதில் தியேட்டரில் பார்த்து சில்லறையை சிதறவிட்டேன் என்றும் அதிதி தான் என்னுடைய காதலி என்று பேசினார் அது மட்டும் இன்றி அதிதியை நான் உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும் சங்கர் தனது படங்களில் காதலை சேர்த்து வைப்பது போல என்னையும் அதிதியுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் கூறியது.

இதனால் பெரும் சர்ச்சையை ஏற்பட்டது இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இவர் பேட்டியில் என்ன நடந்தது என்று தெரியவில்லை திடீரென அவர் தற்பொழுது அதிதி எனது தங்கச்சி மாதிரி என்றும் எனது பள்ளி தேன்மொழி நினைவில் தான் அவ்வாறு பேசிவிட்டேன் என்றும் நான் அப்படி பேசியது தவறானது என்றும் சங்கர் என்னை மன்னித்து விடுங்கள் என்றும் கூறியுள்ளார். இவர் அதிதியை திடீரென தங்கச்சி என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.