ஆக்ரோஷமான கோபத்தை வெளிபடுத்திய ரஜினி, அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள்.! எப்பொழுது தெரியுமா.? இதோ முழு லிஸ்ட்

கோபம் வரும்போது ஒரு மனிதன் தன் நிலையை மறந்து என்ன செய்வான் என்பது தெரியாது. அதுவும் பொதுவாக சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் எல்லாருமே படத்தில் என்னதான் ஆக்ரோஷமாக பேசினாலும் நேரில் மிகவும் சாதுவாக தான் பேசுவார்கள். பெரும்பாலும் இவர்களுடைய கோபத்தை சினிமாவில் மட்டும்தான் பார்ப்போம் வெளியில் அவ்வளவாக காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

என்னதான் அவர்கள் பேட்டி அளிக்கும் போது கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டாலும் ஒரு சில முன்னணி நடிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தி விடுகிறார்கள். எந்த நிலையில் எந்தெந்த நடிகர்கள் எந்த விஷயத்திற்காக கோபப்பட்டு உள்ளார்கள் என்பதை நாம் தற்போது பார்க்க உள்ளோம்.

1.விஜய் – ஷூட்டிங் ஸ்பாட்டில் சரி, வெளியிலும் சரி மிகவும் அமைதியாக இருக்கும் நடிகர் யார் என்று கேட்டால் விஜய் என தான் அனைவரும் கூறுவார்கள் ஆனால் இவர் வில்லு படத்தினை பற்றி பேட்டி நடந்து கொண்டிருக்கும் போழுது நடுவில் யாரோ பேசிக் கொண்டிருந்ததால் விஜய் கத்தி கோபமாக கத்தியுள்ளார்.

2.சூர்யா – தானா சேர்ந்த கூட்டம் படத்திற்காக ஆடியோ லான்ச் செய்வதற்காக ஆந்திரா செல்லும் போது சூர்யா சென்ற காருக்கு முன்னாடி ஒரு இளைஞர் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வேகமாக ரைட் போனதை பார்த்த சூர்யா காரை விட்டு கீழே இறங்கி அந்த இளைஞரரை திட்டிவிட்டு  ஓங்கி கன்னத்தில் அறைந்துள்ளார். அப்பொழுதுதான் முதன் முறையாக சூர்யாவின் உண்மையான கோபத்தை அனைவரும் பார்த்துள்ளனர்.

3.சிவகுமார் – சூர்யா மற்றும் கார்த்தி தந்தையான நடிகர் சிவகுமார். இவர் ஒரு ஷோரூம் ஓபனிங் நிகழ்ச்சிக்கு மதுரைக்கு சென்றிருந்த பொழுது நடிகர் சிவகுமார் அவர்கள் ரிப்பன் கட் பண்ணும் பொழுது ஒரு இளைஞன் செல்பி எடுத்ததால் கடும் கோபமடைந்த சிவகுமார் அந்த இளைஞரின் போனை தட்டி விட்டு உடைத்துவிட்டார்.

4.அஜித் – தல அஜித் பொதுவாகவே எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் கலைஞரின் கருணாநிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு அவரைப் பற்றி மேடையில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது என்னை பலர் மிரட்டி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வைத்தார்கள் என்றும் சினிமாவில் எங்களுக்கு அரசியல் தேவையில்லை என்றும் மிகவும் தைரியமாக கலைஞர் முன்னாடியே கூறியுள்ளார். தல அஜித் இந்த விஷயத்தை கூறி முடித்ததும் ரஜினி அவர்கள் அனைவரும் முன்னாலும் எழுந்து நின்று கைத்தட்டி உள்ளார் அப்பொழுது இந்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.

5.ரஜினிகாந்த் – தூத்துக்குடி போராட்டத்திற்கு அடுத்தது சமூக விரோதிகள் என்று ரஜினிகாந்த் போட்ட ட்வீட் தொடர்ந்து ரஜினியிடம் பிரஸ்மீட்டில் இதனைப்பற்றி கேட்கும் பொழுது மிகவும் கோபமடைந்து பதில் கூறினார். இத்தனை வருட திரையுலக வாழ்கையில் முதன்முறையாக ரஜினிகாந்தின் கோபத்தை மக்கள் அனைவரும் பார்த்தனர்.

6.சிவகார்த்திகேயன் – நாம் எப்பொழுதும் சிரிப்புடனும், மகிழ்ச்சியுடனும் பார்த்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன்.இவர் ரெமோ பட ரிலீஸின்போது மிகவும் எமோஷனல்லாகவும், கோபமாகவும் நாங்கள் யாரும் காயப் படுத்துவதற்காக இந்த படத்தை எடுக்கவில்லை என்றும் என்னால் இனிமேல் இந்த கஷ்டத்தை தாங்க முடியாது எனவும் கூறினார்.

7.சிம்பு – நாம் அனைவரும் எஸ்.டி.ஆர் அதிக இடத்தில் கோபப்பட்டு இருப்பதை பார்த்திருந்தாலும் நடிகர் சங்க எலக்ஷன் பொழுது விஷாலுக்கு எதிராக விளங்கிய சிம்பு விஷாலை பற்றி மிகவும் கோபமாக பேசியுள்ளார்.

8.டிராஜன் – நடிகர் சிம்புவின் தந்தையான டிராஜன் அவர்களும் நடிகர் பிரஸ்மீட்டில் பேட்டி எடுத்துக்கொண்டிருந்த பொழுது எழுந்து நின்று மிகவும் ஆக்ரோஷமாக கத்தி உள்ளார்.

9.தனுஷ் – விஐபி-2 படத்தின் பிரமோஷனுக்காக ஆந்திரா சென்றிருந்த போது அங்கு ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கும் போது vj தனுசுவின் பர்சனல் life பற்றி அதிகமாக கேள்வி கேட்டதால் தனுஷ் எழுந்து நின்று மைகை கழட்டி தூக்கி எறிந்து விட்டு சென்று விட்டார்.

10.இளையராஜா – எஸ்.டி.ஆர்ரின் பீப் சாங் பற்றி இசைஞானி இளையராஜாவிடம் கருத்து கேட்ட பொழுது கேள்வி கேட்ட நிபுணரை உனக்கு அறிவு இருக்கா என்று கோபத்துடன் கூறியுள்ளார்.

11.விஜய் சேதுபதி – மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பெருமாளும் கோபப்பட மாட்டார் எப்பொழுதும் சிரிப்புடனும் ,அமைதியாகவும், கலகலவென இருப்பார். ஆனால் ஒரு பிரஸ்மீட்டில் பொழுது நிபுணர் கேட்ட கேள்விக்கு மிகவும் கோபம் அடைந்துள்ளார்.

12.சரத்குமார் – நடிகர் சங்கத் தேர்தலில் பொழுது கமலுடைய சப்போர்ட் விஷாலுக்கு இருந்த  காரணதால் அவருக்கு எதிராக மிகவும் ஆக்ரோஷமாக நடிகர் சரத்குமார் ஒரு மேடையில் பேசி உள்ளார்.

13.சத்யராஜ் – மக்களுக்கு ஒன்றென்றால் முன் வந்து நிற்பவர் தான் நடிகர் சத்யராஜ். இவர் காவிரி பிரச்சினை என்பது மிகவும் கடுமையாகவும், கோபமாகவும் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.